கோட் படத்தில் குட்டி வயது விஜயாக நடித்த சிறுவன் யார் தெரியுமா ? அட, இவர் இந்த பிரபலத்தின் தம்பியா

0
304
- Advertisement -

கோட் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த சிறுவன் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார்.

-விளம்பரம்-

பின் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். மேலும், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளார்கள். உலகம் முழுவதும் ‘கோட்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

கோட் படம்:

கோட் படம் வசூல் ரீதியாக நல்ல சாதனைசெய்தாலும் கலவையான விமர்சனத்தை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்தில் டிஏஜிங், ஏஐ, மறைந்த நடிகர் விஜயகாந்த் கேமியோ ரோல் என பல விஷயங்களை வெங்கட் பிரபு சேர்த்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. மேலும், இந்த படத்தில் விஜயின் மகனாக குட்டி ஜீவன் சிறுவயது விஜய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

சிறுவயது விஜய்:

அந்த சிறுவனுடைய பெயர் அகிலன். இவர் வேறு யாரும் இல்லை ரவுடி பேபி என்ற யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் குழந்தை நட்சத்திரம் ஆலியா உடைய தம்பி தான். ஆலியா உடைய சேட்டை எல்லாம் அனைவரும் அறிந்ததே. அவருடைய சேட்டையின் மூலம் தான் மக்கள் மத்தியிலேயே பிரபலமாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த இதயத்தை திருடாதே என்ற தொடரிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

அகிலன் குறித்த தகவல்:

அதற்குப் பின் இவர் படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு இவருடைய தம்பி அகிலனும் தற்போது சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருந்த சட்னி சாம்பார் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது கோட் படத்தில் சிறு வயது விஜயாக மிரட்டி இருந்தார். அதோடு அகிலன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கோட் படத்தின் போது விஜய் மற்றும் படக்குழுவினர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம், வீடியோக்கள் எல்லாம் பகிர்ந்து இருக்கிறார்.

படத்தின் கதை:

கோட் பட கதையில், கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர SAT squad டீம் களம் இறங்குகிறது. அதில் விஜய் டீம் அஜய் (அஜய்), பிரசாந்த் (சுனில்), பிரபுதேவா (கல்யாண்) ஆகியோர் ஆயுதங்களுடன் களம் இறங்குகிறார்கள். அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது. இதற்கிடையே, தாய்லாந்துக்கு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காந்தி செல்கிறார். அங்கு காந்தி தனது மகனை பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், கடைசியில் தனது மகனை காந்தி ஒரு பிரச்சனையில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சனை என்ன? காந்திக்கு வில்லனாக ஜீவன் (விஜய் மகன்) மாறியது எப்படி? என்பது தான் படத்தின் மீதி கதை.

Advertisement