சாக்க்ஷிக்கு கொடுக்கப்பட்ட சூப்பர் பவர் என்ன ஆச்சி.! அப்போ இந்த வாரம் இவங்க safe-ஆ.!

0
2258
sakshi
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 நாளை பூர்த்தி செய்துள்ளது இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டு இருந்தார் அவர் ரகசிய அறையில் வைக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்காமல் இவர் நேரடியாகவே வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற தன் கையே தனக்குதவி டாஸ்க்கின் இறுதியில் 490 மதிப்பெண்களுடன் மதுமிதா மூன்றாவது இடத்திலும், 600 மதிப்பெண்களுடன் அபிராமி இரண்டாவது இடத்திலும் 610 மதிப்பெண்களுடன் சாக்க்ஷி முதல் இடத்தையும் பிடித்தார்.

இதையும் பாருங்க : மிஷன் லாஸ்லியா.! லவ்வ தூக்கி குப்பைல போடு.! வெளுத்து வாங்கும் வனிதா.! 

- Advertisement -

இந்த தன் கையே தனக்குதவி டாஸ்கில் சாக்க்ஷி முதல் இடம் பிடித்திருந்ததால், அவருக்கு பிக் பாஸ் சிறப்பு பவர் ஒன்றை அறிவித்திருந்தார். அது என்னவெனில் இந்த வாரம் அதாவது சாக்க்ஷி அவர் வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில், அவர் அடுத்த வாரம் நாமினேஷனில் இடம்பெற மாட்டார் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சாக்க்ஷி நேற்றைய நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டதால், அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அந்த பவர் அவருக்கு அடுத்தபடியாக டாஸிக்கில் இரண்டாம் இடத்தை பிடித்த அபிராமிக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அப்படி வழங்கப்பட்டால் அபிராமி இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement