வடிவேலு-அஜித் பிரச்சனைக்கு காரணமே அந்த வார்த்தை தான் – ஊத்தப்பம் காமெடி நடிகர் சொன்ன உண்மை.

0
128
ajith
- Advertisement -

அஜித்- வடிவேலு பிரச்சனைக்கு இந்த ஒரு வார்த்தை தான் காரணம் என்று காமெடி நடிகர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியிருந்த வலிமை படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அஜித் அவர்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர் அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

அஜித்-வடிவேலு ஒன்றாக நடித்த படம்:

இது ஒரு பக்கம் இருக்க, அஜித் என்றாலே நேர்மையான மனிதன், அன்பானவர், நல்ல குணம் கொண்டவர் என்று பிரபலங்கள் பலராலும் பாராட்டப்பட்டவர். ஆனால், அஜித்திற்கும் வடிவேலுக்கும் எப்போதுமே ஒரு சர்ச்சை இருந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமா வட்டாரத்தில் கூட இவர்கள் சண்டை குறித்து தான் பேசியிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே கடைசியாக 2002 ஆம் ஆண்டு வெளியான ராஜா படத்தில் தான் நடித்திருந்தனர்.

அஜித் வடிவேலு சண்டை:

அந்தப் படத்தின் போது இருவருக்கும் சண்டை நடந்திருக்கிறது. அதனால் தான் இருவரும் ஒன்றாகவே அந்த படத்தில் நடிக்கவில்லை. தனித்தனி காட்சிகளில் நடித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பின்னர் அஜித்துடன் கடந்த 20 வருடங்களாக வடிவேலு நடிக்கவே இல்லை. இந்நிலையில் அஜித்- வடிவேலுவின் பிரச்சனைக்கு இது தான் காரணம் என்று காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

நடிகர் டெலிபோன் ராஜ் அளித்த பேட்டி:

வடிவேல் உடன் டெலிபோன் ராஜ் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர் அஜித்- வடிவேலு சண்டை குறித்து கூறியிருந்தது, ராஜா திரைப்படத்தில் அஜித் உடன் வடிவேலு நெருங்கி பழக தான் ஆரம்பித்தார். வடிவேலு வயசுல பெரியவர். ஒரு படத்தில் நடிக்கும் போது சக நடிகருடன் நெருக்கமாக பழகுவது ஒன்றும் தப்பில்லை. அதே போல் பெயர் சொல்லி அழைப்பதும் ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.

அஜித்-வடிவேலு பிரச்சனைக்கு காரணம்:

ஆனால், அஜித் ஈகோ பார்த்து இருக்கிறார். ஒரு நாள் அஜித்தை வடிவேலு, ‘அஜித்தே’ என பெயர் சொல்லி அழைத்து விட்டார். அது அஜித்திற்கு பிடிக்கவில்லை. அதற்கு பிறகு தான் அஜித் வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அந்த படத்திலும் அவர்கள் இருவரின் காட்சிகளும் தனியாகவே எடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement