மகன் மற்றும் மகளுக்கும் அஜித் பெயர் வைத்தது ஏன் ? மதுரை தம்பதியினர் சொல்லும் காரணம்..

0
2915
ajith-fan
- Advertisement -

மதுரையில் உள்ள ஒரு குடும்பம் தங்களுடைய மகனுக்கு “தல அஜித்” என்று பெயர் வைத்துள்ளார்கள். மேலும், எல்.கே.ஜி படித்து வரும் தல அஜித்தின் ஐடி கார்டு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி உள்ளது. இந்த தகவல் தான் தற்போது இணையங்களில் ட்ரெண்டிங்காக பரவி வருகின்றது.
தென்னிந்திய சினிமாத் திரை உலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக அல்டிமேட் ஸ்டாராக அஜித் குமார் கலக்கி கொண்டிருக்கிறார். தல அஜித் என்று சொன்னால் போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தவர். அந்த வகையில் மதுரையை சேர்ந்த தம்பதியினர் தனது பிள்ளைகளுக்கு அஜித் பெயரை வைத்து, அஜித் தங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று நிரூபித்துள்ளனர்.

அஜித்தா, தல அஜித்

இதனால், தல ரசிகர்களும், மக்களும் சந்தோஷத்திலும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், அந்த குடும்பத்தை பாராட்டியும் வாழ்த்தியும் வருகிறார்கள் ரசிகர்கள் . எப்பவுமே நமக்கு பிடித்த நடிகரின் பெயரை தங்களுடைய பிள்ளைகளுக்கு வைப்பது வழக்கமான ஒன்று. ஆனால், அந்த நடிகர்களின் அடைமொழியையும் சேர்த்து வைப்பது ரொம்ப பெரிய விஷயம் என்று கூட சொல்லலாம். அதை தான் மதுரையை சேர்ந்த ஒரு குடும்பம் செய்துள்ளது. மதுரையில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் மதுரை வீரன்– ஜோதிலட்சுமி தம்பதியினர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவங்க ரெண்டு பேரும் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர்களும், அவர் மீது பயங்கர ஈர்ப்பும் உள்ளவர்கள். அஜித்தின் ஒரு படத்தை கூட பார்க்காமல் இருந்து இல்லையாம். எப்படியாவது, எந்த சூழலில் ஆவது அந்த படத்தை பார்த்து விடுவார்கள். மேலும், அவர்கள் அஜித்தின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி பிறந்த அவர்களுடைய மகனுக்கு “தல அஜித்” என பெயர் சூட்டி உள்ளார்கள். இது மட்டுமில்லீங்க, இவர்களுக்கு இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தை கூட “அஜித்தா” என பெயர் சூட்டி உள்ளார்கள்.

இதையும் பாருங்க : தனுஷுக்கு வில்லனாக சிம்பு.. வைரலாகும் வெற்றிமாறனின் ட்விட்டர் பதிவு..

- Advertisement -

மேலும், இந்த பெயர்களை அவர்கள் பேச்சுக்காக வைத்துக் கொள்ளாமல் அரசு சம்பந்தப்பட்ட பிறப்பு சான்றிதழ் ,ஆதார் அட்டை, குடும்ப அட்டை என அனைத்து ஆவணங்களிலும் பதிவு செய்து உள்ளார்கள். இப்போது இவர்கள் இரண்டு பிள்ளைகளும் பள்ளியில் பயின்று வருகிறார்கள். அதில் தனியார் பள்ளி ஒன்றில் இவர்களின் மகன் எல்.கே.ஜி. பயின்று வருகிறார். மேலும், தல அஜித் என்று பெயர் கொண்ட அந்த சிறுவனின் அடையாள அட்டை புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்கள். இதனால் தல ரசிகர்களும், மக்களும் மதுரைவிரன்- ஜோதிலட்சுமி தம்பதியரை வாழ்த்தியும், பாராட்டியும் வருகிறார்கள்.ஊடகங்கள் அஜித்தின் அடைமொழி உடன் சேர்த்து உங்கள் மகனுக்கு “தல அஜித்” என்று ஏன் ? பெயர் வைத்துள்ளீர்கள் என்று மதுரை வீரன்- ஜோதிலக்ஷ்மி தம்பதியிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் கூறியது, தல என்றால் அஜித், அஜித் என்றால் தல என்பது தானே வழக்கம். அஜித்தின் அடைமொழியை பிரிக்காமல் வைத்தோம்.

அஜித்
பிறப்பு சான்றிதழ்

என் மகன் என் வயிற்றில் இருக்கும்போதே நாங்கள் அஜித்தின் பெயரை வைக்க வேண்டும் என முடிவு செய்து விட்டோம். அதனாலதான் அஜித் என்று பிரித்து வைக்காமல் தல அஜித் என்று சேர்த்து முழுசா வைத்துவிட்டோம். எங்க ரெண்டு பேருக்குமே அஜித் ரொம்ப புடிக்கும். மேலும், அவர் நடிகர் என்பதால் மட்டும் இல்ல.அதையும் தாண்டி அவர் தன் வாழ்வில் விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுகிற விதம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடிகராக மட்டுமில்லாமல் பைக் ரேசர்,கார் ரேசர், மோட்டார் மெக்கானிக்,பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஆலோசகர், துப்பாக்கி சுடும் வீரர் எனப் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், தன்னுடைய வாழ்க்கையில் வரும் இன்பம் துன்பங்களை எல்லாம் தாண்டியும், பல தடைகளை தகர்த்தெறிந்து சாதித்து வருபவர். அவர் பெயரைச் சொன்னாலே போதும் உற்சாகம் அனைவர் மனதிலும் ஏற்படும். நாங்க எங்கள் மகன் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் வளர்ந்து சாதிக்க வேண்டும் என்பதற்காக அவருடைய பெயரை வைத்தோம் என்று கூறினார்கள். இப்போ எங்கள எல்லாருமே பாராட்டி,வாழ்த்தியும் வருகிறார்கள் . இவங்க பாராட்டுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

Advertisement