தளபதி விஜய்க்கும்- சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் இல்லாமல் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பாடல் வெளியிட்டு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது.
பீஸ்ட் படம் பற்றிய தகவல்:
இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ஜாலியோ ஜிம்கானா என்று தொடங்குகிறது. இந்த பாடலை கு. கார்த்திக் எழுதி இருக்கிறார். மேலும், இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் படம் உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் கேஜிஎப் 2 படம் பீஸ்ட் படத்துடன் மோத இருப்பதாக சில தினங்களாகவே சோசியல் மீடியாவில் தகவல் உலாவந்து கொண்டிருக்கிறது.
கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் ரிலீஸ் குறித்த தகவல்:
கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியிடுவதாக கூறப்பட்ட நிலையில் பீஸ்ட் படம் வெளியாகி ஒரு நாள் இடைவெளியில் அடுத்த நாள் கேஜிஎப் 2 படம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் இதை பெரிய மோதல் ஆகவே பார்க்கின்றனர். இதனைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்கள் ‘நாளை’ என்ற ட்விட்டை போட்டிருந்தார். அதனால் பீஸ்ட் படத்தின் டீசர் வெளிவரப் போகிறது என ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வரை ஒரு பதிவு கூட போடவில்லை. அதனால் பீஸ்ட் படத்திற்கு ஏதேனும் அரசியல் நெருக்கடிகள் இருக்கிறதா? என்று ரசிகர்கள் தரப்பில் இருந்து கேள்விகள் எழுந்தது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம்- விஜய் இடையே பிரச்சினை:
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விஜய்க்கு இடையே தான் பிரச்சினை என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சினை குறித்து பல்வேறு தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதில், டீஸ்ட் படத்தின் கடைசி அவுட்புட் பார்த்துவிட்டு சன்பிக்சர்ஸ் திருப்தி அடையவில்லை என்றும் அதனால் தான் இப்படி இருவருக்கும் இடையே தகராறு என்றும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் கே ஜி எஃப் 2 ரிலீஸ் ஆவதால் பீஸ்ட் ரிலீஸ் தேதியை ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தள்ளி வைக்கலாம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜயிடம் கேட்டபோது விஜய் தேதியை மாற்ற வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் வருத்தத்திற்கு காரணம்:
இதனால் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ஏற்கனவே அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் சரியாகப் போகாததால் சன்பிக்சர்ஸ் இந்த பீஸ்ட் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது எனவும் கே ஜி எஃப் 2 உடன் மோதலை தவிர்க்க நினைப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இப்படி சன் பிக்சர்ஸ் மற்றும் விஜய் இடையே இருக்கும் பிரச்சினை குறித்து பல்வேறு புரளிகள் சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு பீஸ்ட் படக்குழுவினர் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.