அந்த உணவை பற்றி மட்டும் ஏன் பேச பயப்பிடுகிறீர்கள்? யூடுயூப்ல ஒரு வீடியோ கூட இல்ல – ஜெய் பீம் பட இயக்குனர் (வனிதா யூடுயூப பாக்கல போல)

0
253
- Advertisement -

ஒரு வகை உணவை பற்றி மட்டும் ஜெய்பீம் இயக்குனர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது.

-விளம்பரம்-
jaibhim

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன வழக்கறிஞராக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் சந்துரு கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே பழங்குடியின மக்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. இந்தப்படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

வெளியான பறை மியூசிக் வீடியோ:

அதோடு இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதே சமயம் இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். இருந்தாலும், படம் ஆஸ்கர் வரை வெற்றி கண்டது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பறை மியூசிக் வீடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஞானவேல் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விழாவில் இயக்குனர் ஞானவேல் பேசியது:

பறை இசைக்கலைஞர்கள் இறந்துபோனால் புதைப்பதில் ஏற்படும் சமூக சிக்கல் குறித்து பறை என்ற மியூசிக் வீடியோ ஆல்பம் யூடியூபில் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான வெளியீட்டு விழாவில் ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர் பேசியது, இன்றைக்கு வரைக்கும் நாம் சுதந்திரத்திற்கு போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்திய அரசியல் சாசன அடிப்படையில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்பது சாத்தியமாக இருக்கலாம்.

-விளம்பரம்-

ஏன் இந்த உணவு பற்றி பேசுவதில்லை:

ஆனால், இன்னும் பண்பாட்டு ரீதியாக நாம் அடிமைப்பட்டு தான் இருக்கிறோம். நாம் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதற்கு இந்த சுதந்திரம் கிடையாது. என்ன சாப்பாடு சாப்பிடுகிறோம் என்பதில் சுதந்திரம் கிடையாது. நினைத்துப் பாருங்கள், எத்தனை விதமான விஷயங்கள் யூடியூபில் இருக்கிறது. எத்தனை வகையான குக்கிங் சேனல் இருக்கிறது. ஆனால், அவற்றில் மாட்டுக்கறி மாதிரியான உணவை குறித்த ஒரு வீடியோவை நீங்க பார்க்கவே முடியாது.

நான் வலியுறுத்த விரும்புவது:

அது ஒரு உணவு தானே? அதை சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள் தானே? ஏன் அந்த உணவு குறித்த வீடியோவை போட முடியவில்லை? உணவு, கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றிலும் தீண்டாமையை நம்மை அறியாமல் நாம் கடைபிடித்து வருகிறோம். இதை யாரும் செய்யவில்லை. அதை தான் நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறி இருந்தார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால், மாட்டு கறி பிரியாணியை செய்து அதை வீடியோவாக நம்ம வனிதா அக்காவே வெளியிட்டுள்ளர்.

Advertisement