விஷால் எடுத்த அதிரடி முடிவு ! அடுத்தகட்ட நடவடிக்கை இதுதான் ! பீதியில் வேட்பாளர்கள்

0
2960

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, நடிகர் விஷால் தாக்கல்செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அரசியல் தளத்தில் பெரும் சலசலப்பைக் கிளப்பியுள்ள நிலையில், தனது அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து விஷால் தெரிவித்துள்ளார்.
vishal-nomination-acceptedஇதுகுறித்துப் பேசிய விஷால், `அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இன்றே அறிவிப்பேன். சுயேச்சையாக நிற்கும் இளைஞரில் ஒருவருக்காக பிரசாரம் செய்து ஜெயிக்கவைப்பேன். எனது மனுவை ஏற்பதில் பிரச்னை என்று தெரிந்தவுடன், பல சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரிடம் நேரடியாக வந்து நியாயம் கேட்டனர்.

அவர்களுக்குத் தெரியும் உண்மை யார் பக்கம் இருந்தது என்பது. எனவே, அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து பிரசாரம் செய்வேன். அவர்களின் வெற்றிக்குப் பாடுபடுவேன். இதுகுறித்து இன்றே அறிவிப்பேன்’ என்று முடித்துக்கொண்டார்.