-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

‘திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார்’ -பிக் பாஸ் வீட்டின் பொறுப்பாளர் மீது பெண் ஊழியர் புகார்

0
121

பிக் பாஸ் வீட்டின் பொறுப்பாளர் மீது பெண் ஒருவர் கொடுத்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு என்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். வருடம் வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. இதுவரை ஏழு சீசனை பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்திருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளர்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்களோ அந்த அளவிற்கு பிக்பாஸ் வீடும் பிரபலம். சொல்லப்போனால், பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த பிக் பாஸ் வீடு சென்னையில் பூந்தமல்லி பகுதியில் ஈவிபி ஃபிலிம் சிட்டி வளாகத்தில் தான் அமைக்கப்படுகிறது. 100 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த வீட்டினுடைய செட்டை கலைத்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான வேலைகளை அதே வீட்டில் தான் நடைபெறுகிறது. சில மாற்றங்களை மட்டும் செய்கிறார்கள். இதனால் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனேயே மலையாள சீசன் தொடங்கி விடுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும்போதும், நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் அந்த வீட்டை பராமரிப்பதற்கு என்றே சில பேர் அங்கேயே தங்கி இருக்கிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சி எண்டமோல் என்ற மும்பை நிறுவனத்தின் தயாரிப்பு.

பிக்பாஸ் வீடு:

-விளம்பரம்-

இதனால் வீட்டை பாதுகாக்கும் ஊழியர்களையும் அந்த நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் ஊழியர் கொடுத்து இருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெண் ஊழியர் திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் பிக்பாஸ் வீட்டில் வேலை பார்த்து வரும் நபருடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். அந்த நபர் பிக் பாஸ் வீட்டினுடைய பொறுப்பாளராக இருக்கும் கிரண்.

-விளம்பரம்-

பெண் ஊழியர் கொடுத்த புகார்:

கிரண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றியதாக அந்தப் பெண் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். அதற்குப் பின் கிரண் அந்த பெண்ணிடம் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த பெண் அளித்தபுகார் மீது எந்த நடவடிக்கையும் போலீஸ் எடுக்கவில்லை. இதனால் இவர் மகளிர் ஆணையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக பேட்டியில் கிரண், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும்போதும் சரி, அதற்கு பிறகும் சரி அந்த இடத்திற்கு பொறுப்பாளராக இருந்து கவனித்துக் கொள்வது என்னுடைய வேலை.

கிரண் அளித்த பேட்டி:

அதற்காக மும்பையை சேர்ந்த என்டமோல் கம்பெனி தான் எங்களுக்கு சம்பளம் தருகிறது. அந்தப் பெண் இங்கே செக்யூரிட்டியாக வேலை பார்த்தார். ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் எனக்கு அவர்களை தெரியும். சில நாட்கள் பேசியிருக்கிறோம் அவ்வளவுதான். எனக்கு திருமணமாகி குழந்தைகள் எல்லாம் இருக்கிறது. அவர்களை நான் கல்யாணம் செய்து கொண்டதாக சொல்லப்படுவது எல்லாம் பொய். பிக் பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் டிவியின் பெயரையும் கெடுக்கும் நோக்கத்துடன் இப்படி ஒரு போலியான புகாரை அந்த பெண் கொடுத்திருக்கிறார். விஜய் டிவிக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மகளிர் காவல் ஆணையத்தில் இருந்து என்னைக் கூப்பிட்டார்கள். அங்கெல்லாம் என் தரப்பு பதிலை சொல்லிவிட்டு வந்தேன். இன்னும் எங்க கூப்பிட்டாலும் செல்ல நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news