கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் மீடூ மூமென்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை கோபால புறத்தில் இருக்கும் வீட்டில் வசித்து வரும் விஷ்வதர்ஷினி என்ற பெண் ஒருவர் நடிகர் விஷால் தனது வீட்டில் அருகில் இருக்கும் ஒரு பெண்ணை சந்திக்க இரவு நேரத்தில் வருவார் என்றும்,அவர் நடு இரவில் அந்த பெண்ணின் வீட்டிற்குள் வீடேரி குதிப்பார், பின்னர் 2 மூன்று மணி நேரம் கழித்து தான் வெளியே வருவார் என்று கூறியிருந்தார்.
மேலும், நடிகர் விஷால் அந்த பெண்ணின் வீட்டிற்குள் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவுள்ளதாகவும் விரைவில் அந்த ஆதாரத்தை வெளியிடுவேன் என்றும் விஷ்வதர்ஷினி வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் விஷ்வதர்ஷினி வீட்டில் அருகில் வசித்து வருவதாக கூறப்பட்ட பெண்ணின் வீட்டில் ஒரு 16 வயது பெண் தான் இருக்கிறார் என்று தெரியவந்தது.
இந்நிலையில் அந்த பெண், தன் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டை விஷ்வதர்ஷினி வைத்துள்ளார் என்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதனால் விஷ்வதர்ஷினி மீது குழந்தைகள் மற்றும் பாலியல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் விரைவில் விஷ்வதர்ஷினி கைது செய்யபடலாம் என்று கூறப்படுகிறது.