லாரன்ஸ் செய்த உதவி, செய்கை மொழியில் நன்றி தெரிவித்த வாய் பேச முடியாத பெண். நெகிழ வைத்த வீடியோ இதோ.

0
1877
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல முன்னணி நடிகர்கள் நிதியுதவி கொடுத்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் நடன இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

இதையும் பாருங்க : வி ஐ பி படத்திற்கு முன்பாகவே விக்னேஷ் சிவனை இந்த படத்தில் நோட் செய்துள்ளீர்களா. அதுவும் ஹீரோ நண்பனாக.

- Advertisement -

அவரும் கொரோனா நிவாரண பணிகளுக்காக நிதியுதவி வழங்கியிருந்தார். அதுமட்டுமின்றி, இந்த ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் பொருளாதார ரீதியில் ரொம்பவும் கஷ்டப்பட்டு வரும் பலருக்கும் தன்னால் முடிந்த அளவிற்கு நிதியுதவி அளித்து வருகிறார். தற்போது, பல கஷ்டப்பட்டு வாழும் குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை கொடுத்து உதவி செய்து கொண்டிருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

Raghava Lawrence Urges People To Stay Indoors; Explains ...

அதில் வாய் பேச முடியாத ஒரு பெண்ணும், நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த மளிகை பொருட்களை வாங்கியிருக்கிறார். அவர் மளிகை பொருட்களை வாங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோ பதிவில் அந்த வாய் பேச முடியாத பெண், நடிகர் ராகவா லாரன்ஸுக்கு தனது நன்றியை சைகையில் சொல்லியிருந்தார்.

-விளம்பரம்-

இப்போது நடிகராக ‘சந்திரமுகி 2’ மற்றும் இயக்குநராக ‘லக்ஷ்மி பாம்’ என இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். இதில் ‘சந்திரமுகி 2’ என்ற தமிழ் படத்தை பிரபல இயக்குநர் பி.வாசு இயக்கவிருக்கிறார். இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கவுள்ளாராம். ‘லக்ஷ்மி பாம்’ என்ற ஹிந்தி படத்தில் கதையின் நாயகனாக முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் நடித்து கொண்டிருக்கிறார். இது ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து சூப்பர் ஹிட்டான ‘காஞ்சனா’ என்ற தமிழ் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement