புட்பால் குறித்து பிரபல WWE வீரர் போட்ட ட்வீட். பிகில் படத்தை பங்கமாக காலாய்க்கும் அஜித் ரசிகர்கள்.

0
18268
WWe-Seth-rollins
- Advertisement -

சர்கார் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய், அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்துள்ளார். தெறி மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது அட்லி மற்றும் விஜயின் வெற்றி கூட்டணி விஜய் நயன்தாரா விவேக் யோகி பாபு ஆனந்தராஜ் இந்துஜா டேனியல் பாலாஜி இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்தப் படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது அக்டொபர் 25 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

மெர்சல் திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் இந்த படத்தில் ராயப்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் தான் மிகவும் மாஸாக இருக்கிறார் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் மத்தியில் பேராதரவு பெற்றாலும், இந்த படம் ஒரு சுமாரான படமாகத்தான் மற்ற ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும், தெரி மற்றும் மெர்சல் படங்களை ஒப்பிடும்போது இந்த படம் அந்த அளவிற்கு நன்றாக இல்லை என்றும் கருத்துக்கள் நிலவி வருகிறது.

இதையும் பாருங்க : சேரன் வீட்டில் தீபாவளியை கொண்டாடிய பிக் பாஸ் பிரபலங்கள். வைரலாகும் புகைப்படங்கள்.

- Advertisement -

இந்தத் திரைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் இந்த திரைப்படத்தில் பல காட்சிகளை அட்லி காப்பியடித்து எடுத்துள்ளார் என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்துஜா விஜய்யிடம் சொல்லும் ‘குட் மார்னிங் கோச்’ என்ற காட்சியை ஷாருக்கான் நடித்த சக்தே படத்திலிருந்து. விஜய் ஒரு காட்சியில் சொல்லும் ‘ஜெயிப்பதற்காக விளையாடவேண்டும் அடுத்தவனை தோற்கடிப்பதற்காக விளையாடக்கூடாது என்று கூறும் வசனத்தை, சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் பேசிய வசனத்தில் இருந்தும் சுட்டுள்ளார் அட்லி.

-விளம்பரம்-

இதனால் அட்லீயையும் பிகில் படத்தையும் அஜித் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில், பிரபல WWE வீரர் சேத் ரோலின்ஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எனக்கு புட்பால் பிடிக்காது’ என்று ட்வீட் செய்துள்ளார். இந்த பதிவினை தற்போது பகிர்ந்து வரும் அஜித் ரசிகர்கள், பிகில் படத்தை பார்த்துவிட்டு தான் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்று பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.மேலும் , இதெல்லாம் யாரால ராயப்பனாலயா, மைக்கேலாலயா, பிகிலே…..என்று பிகில் படத்தில் விஜய் பேசிய மாஸ் வசனத்தை எல்லாம் பங்கம் செய்து வருகின்றனர்.

அதேபோல பெண்கள் அணியுடன் கால் பந்தை வைத்து விஜய் செய்யும் சாகசத்தை பிரபல கால்பந்தாட்ட வீரர் ஒருவரின் வீடியோ ஒன்றில் இருந்தும் சுட்டுள்ளார் என்றும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி அட்லியின் பூட்டை உடைத்து வருகிறது. பிகில் திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை செய்து வந்தாலும். இந்த திரைப்படத்திற்கு வந்து கொண்டிருக்கும் சில மோசமான விமர்சனங்களால் திரையரங்கு ரசிகர்களின் கூட்டம் குறைந்து கொண்டு வருகிறது. அதே போல பிகில் படத்திற்கு எதிராக வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாளில் தமிழகத்தில் குறைவான திரையரங்குகளில் வெளியிடப்பட்டகைதி திரைப்படத்தின் காட்சிகளை திரையரங்குகளும் அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement