தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த்து வருகிறார். நடிகர் விஜய் எத்தனையோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தந்தை கதாபாத்திரத்தில் நடித்தது ஒரு சில படங்களில் மட்டும் தான். அதிலும் அட்லீ, விஜய்யை வைத்து எடுத்து மூன்று படங்களிலும் நடிகர் விஜய் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அட்லீ இதுவரை விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று படங்களை எடுத்துள்ளார். சமீபத்தில் வந்த பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதில் அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் முதன் முறையாக வெளியான ‘தெறி ‘திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தனர். மேலும், ராதிகா, மஹிந்திரன், மொட்ட ராஜேந்திரன் என்று பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தார்னர். அதே போல இந்த படத்தில் விஜய்யின் மகள்களாக பிரபல நடிகை மீனாவின் மகளான பேபி நைனிகாவும், விஜய்யின் மகள் திவ்யா ஷாஷாவும் நடித்திருந்தனர்.

இதையும் பாருங்க : 2019-ல் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ள தமிழ் சினிமா. டாப்பில் இருக்கும் தளபதி.

ஆனால், பேபி நைனிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது பிரபல நடிகரான ஸ்ரீயின் மகள் தானாம். நடிகர் ஸ்ரீ பிரபல இசையமைப்பாளரான சங்கர் கணேஷின் மகன் என்பது குறிபிடத்தக்கது. மேலும், பல்வேறு சீரியல்களில் தற்போது யாரடி நீ மோகினி தொடரில் நடித்து வருகிறார். அதே போல நடிகர் ஸ்ரீ பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர், சஞ்சீவ், விஜய் ஆகியோர் நண்பர்கள் என்பதும் குறிபிடத்தக்கது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீயிடம், அவரது மகள் குறித்த கேட்கபட்ட போது, தெறி படத்தில் விஜய்யின் மகளாக என் மகளை தான் நடிக்க வைக்க முதலில் கேட்டார்கள், நான் தான் முடியாது என்று சொல்லிவிட்டேன்

Advertisement

Advertisement

என்னுடைய உறவினரின் திருமணத்தில் இயக்குனர் அட்லீ என்னுடைய மகளை பார்த்துள்ளார். என் மகள் எப்போதும் துரு துறுவென இருப்பார். அதன் பின்னர் அவருடைய உதவியாளரை விட்டு என் மகளை தெறி படத்தில் விஜய் மகளாக நடிக்க கேட்டார். ஆனால், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன் ஏனென்றால் அது படிக்கின்ற வயசு. அது மட்டுமல்லாமல் அவள் வளர்ந்து தனது வாழ்க்கைக்கு எது தேவை என்று யோசிக்க தெரிந்த வயது வந்தவுடன் அவள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது அவளுடைய விருப்பம். ஆனால், தெறி படத்தின் போது அவள் சின்ன குழந்தை அதனால் அவள் வாழ்க்கையில் நான் முடிவு எடுக்க கூடாது என்று நான் வேண்டாம் என்று விட்டு விட்டேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீ.

Advertisement