தன்னை விட வயதில் மூத்த நடிகையை திருமணம் செய்த்துக்கொண்ட யாஷ்.! ஒரு குழந்தை வேறு இருக்கிறதாம்.!

0
1284
Yash
- Advertisement -

பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அது தான் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம். 

-விளம்பரம்-

கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகியுள்ளது. கன்னடம் ,தமிழ் மொழியில் நேரடியாக வெளியாகியுள்ள இந்த படம் ஆச்சரியப்படுத்தும் விதமாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

- Advertisement -

யாஷ் கடந்த ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது கே ஜி எப் திரைப்படம் தான். யாஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு ராதிகா பண்டித் என்ற நடிகையை திருமணம் செய்த்துக்கொண்டார்.

கன்னடத்தில் பிரபல நடிகையான இவர், யாஷ்ஷுடன் மூன்று படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து பின்னர் திருமணத்தில் முடிந்தது.
இவர்கள் இருகிவருக்கும் 2018 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் யாஷ்சை விட அவரது மனைவி இரண்டு வயது மூத்தவர்.

-விளம்பரம்-
Advertisement