நான் இதற்க்காகத்தான் பிக் பாஸ் வந்தேன்.! யாஷிகா சொன்ன அதிரடி காரணம் என்ன தெரியுமா..?

0
919
bigg-boss-yashika-anandh

சமீபத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் மூலம் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்தில் நடித்ததன் மூலம் சில பல கெட்டப்பெயரையும் இவர் சம்பாதித்தார். தற்போது ‘பிக் பாஸ் சீசன் 2’ நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.

yaashika-aanand

நேற்று தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் தான் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டினுள் போட்டியாளராக நுழைந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தான் பங்குபெற்றதிற்கான காரணத்தை தெரிவித்திருந்தார் ‘எனக்கு 16 வயது இருக்கும் போது துருவங்கள் 16 படத்தில் நடித்திருந்தேன். அப்போது நான் என்னுடைய பள்ளியில் பிரபலமடைந்துவிட்டேன்.

என்னை எனது பெற்றோர்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து வளர்த்துள்ளார்கள். எனக்கு இப்போது 18 வயதாகிறது இருப்பினும் ஒரு 24 வயது பெண் போலவே தான் நான் யோசிப்பேன். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்ததனால் என்னை சிலர் தவறாக நினைக்கின்றனர். நான் யார் என்று எனக்கு தெரியும்.

yashika-anandh

என்னை பற்றி என்னுடைய குடும்பத்தாருக்கு தெரியும். ஆனால், மற்றவர்களுக்கு நான் யார் என்பது தெரியாது. மற்றவர்களும் என்னைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.’ என்று தெரிவித்துள்ளார். பிக் பாஸ் 2 பெண் போட்டியாளர்களில் இவர் தான் இளம் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.