யாஷிகாவிடம் ரேட்டு கேட்ட போலீஸ்..!முன்பே வெளியான வீடியோ ஆதாரம்..!

0
3
Yashika
- Advertisement -

இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ‘பிக் பாஸ் 2’வில் கலந்து கொண்டு போதிய வரவேற்பையும் பெற்றார். சமீபத்தில் ‘மீடூ’ விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து வரும் நிலையில், யாஷிகாவும் ‘மீடூ’ புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அவர் ஒரு பெரிய இயக்குநர். பிரபல இயக்குநர். பிரபல ஹீரோவுக்கு தந்தை போல் இருப்பவர். அவரை சந்திப்பதற்குச் சென்ற போது, அவரின் படத்தில் நடித்த போது எனக்கு பாலியல் தொல்லை அளித்தார் என்று தெரிவித்திருந்தார்.

அதே போல அந்த பேட்டியில் காவல்துறையிலும் சில மோசமானவர்கள் இருக்கிறார்கள். எனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து நான் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறேன். ஆனால் அதன்மீது நடவடிக்கை இல்லை. சில போலீசார் கூட என்னை தவறான கண்ணோட்டத்தில்தான் பார்த்தனர்.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன்னர் யூடுயுபில் ஒரு பெண்ணிடம் ரேட் கேட்ட போலீஸ்காரர் ஒருவரை ஒரு நபர் அடிப்பது போல ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில் இருக்கும் பெண் வேறு யாரும் இல்லை நான் தான் என்று திடுக்கிடும் தகவலையும் தெரிவித்திருந்தார் நடிகை யாஷிகா.

Advertisement