தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அஜித், இன்று (மே 1-ஆம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். ஆகையால், அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#HBDThalaAjith, #AjithKumar, #தலஅஜித்’ என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் நடிகர் அஜித்தின் ரசிகர்கள். இவர்களை போலவே தமிழ் சினிமாவில் இன்னொரு முன்னணி நடிகரான விஜய்யின் ரசிகர்களும் ட்விட்டரில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது சர்ப்ரைஸாக இருக்கிறது.

அதே போல பல்வேறு பிரபலங்களும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே அஜித்தை பற்றிய பல்வேறு அறிய விஷயங்களை தோண்டி எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் அஜித்துடன் நடித்த நடிகர் நவ்தீப் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் எப்படி இருப்பார்? என்ன செய்வார் என்ற சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ள்ளார்.
பொதுவாக அஜித்துடன் நடித்த நடிகர் நடிகைகளை கேட்டால் அஜித்தின் எளிமையான குணத்தை பற்றி தான் முதலில் சொல்லுவார்கள். அந்த வகையில் அஜித் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ஏகன் படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் கூறியுள்ளார் நடிகர் நவதீப். ஏகன் படத்தை பிரபுதேவாவின் சகோதரரான ராஜு சுந்தரம் தான் இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் நடிகர் அஜித் ஒரு கல்லூரி மாணவராகவும் சில காட்சியில் நடித்திருப்பார். மேலும், இந்த படத்தில் கல்லூரி மாணவனாக நடித்தவர் நடிகர் நவதீப். நடிகர் நவதீப் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் ஆவார். ஆனால், இவர் தமிழில் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சமானார். அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நவதீப், ஏகன் படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதில், அஜித்துடன் நடித்ததால் ஏகன் ஒரு ஸ்பெஷலான படம் அவருடன் நடிக்கும் போது நாங்கள் ஒரு பெரிய நடிகருடன் நடிக்கிறோம் என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காக அவர் எப்போதும் எங்களை சௌகரியமாக வைத்துக் கொள்வார். எங்களுடன் அமர்வது,எங்களுடன் ஒன்றாக சாப்பிடுவது அரட்டை அடிப்பது எங்கள் அனைவருக்கும் சாப்பாடு எடுத்து வருவது என்று அனைத்தையும் செய்தார்.
மற்றவர்கள் சவுகரியமாக உணர வேண்டும் என்பதற்காக அவர் தன்னுடைய சௌகரியகரியத்தில் இருந்து வெளிவந்து நம்மிடம் சகஜமாக பழகுவார். அப்படித்தான் ஏகன் படத்தில் ‘ஹேய் சாலா’ என்ற பாடல் வரும். அந்த பாடலை பிரபுதேவா தான் கொரியாகிராப் செய்திருந்தார். அந்த பாடலுக்கு நடுவே அஜித் சார் அடிக்கடி மைக்கை எடுத்து ஏதாவது ஜோக் சொல்லி அனைவரையும் ஜாலியாக வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார்.