விஜய், அஜித், கவுண்டமணி ஆகியோர் குறித்து சுவாரசிய தகவளை சொன்ன யோகி பாபு..!

0
864
Yogi-babu
- Advertisement -

லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றி பின்னர் சினிமாவில் சைடு ரோல்களில் நடித்து தற்போது முன்னணி காமடி நடிகராக விளங்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய், அஜித், கௌண்டமணி குறித்து சுவாரசியமான பல தகவலை பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
yogi babu

விஜய் பற்றி :
விஜய் அஜித் ரெண்டுபேருமே எனக்கு ஒண்ணுதான். பிரிச்சுப்பார்க்கப் பிடிக்கலை. ரெண்டுபேர்கிட்டேயும் நிறைய அனுபவங்கள் இருக்கு. நான் ரொம்ப சின்ன ஆர்ட்டிஸ்ட். ஆனா, ரெண்டுபேருமே என்னைப் பக்கத்துல கூப்பிட்டு உட்கார வெச்சு அழகு பார்த்தாங்க. அது எனக்கு பெரிய ஆச்சர்யம். விஜய் சார்கூட நடிக்கிறப்போ, நான் அவரைக் கலாய்ச்சு ஏதாச்சும் வசனம் பேசுனா, அதை மனசார ஏத்துக்கிட்டு சிரிக்கிறார்.

இதையும் படியுங்க :2018 இல் யோகிபாபுவிற்கு பிடித்த படம் சர்கார் கூட இல்லையாம்..!இந்த படம் தானம்..!

- Advertisement -

அஜித் பற்றி :
விஸ்வாசம்’ படத்துல அஜித் சார்கூட நடிக்கிறப்போ, அவரை கலாய்ச்சு ஒரு வசனம். பேசுறதுக்கு முன்னாடி அவர்கிட்ட ‘அண்ணே… பேசட்டுமா?’ன்னு தயங்கிக்கேட்டேன். அதுக்கு, ‘என்ன யோகி பாபு இப்படிக் கேட்குறீங்க… இது உங்க வேலை. பேசுங்க’ன்னு சொன்னார். 

Yogi babu with ajith

கௌண்டமணி பற்றி :

எனக்கு ரொம்பப் பிடிச்ச காமெடி நடிகர் கவுண்டமணி சார். நானும் அவரும் வாரத்துல ஒரு முறையாவது போனில் பேசுவோம். ‘சார், இந்தப் படத்துல உங்களுடைய பன்ச் வெச்சுத்தான் பேசி முடிச்சேன்’னு சொல்வேன். அவரும் சிரிச்சுக்கிட்டே, ‘அப்படியா ராஜா’னு கேட்டுக்குவார். ஹீரோவா நடிக்கிற பலரும் 
எம்.ஜி.ஆர்., ரஜினி சார் மாதிரி ஆகணும்னு நினைச்சுத்தானே வர்றாங்க. அதுமாதிரிதான் இதுவும். காமெடி நடிகர்களுக்குக் கவுண்டமணி சார்தானே ஸ்டார்.” என்று பல்வேறு தகவலை பகிர்ந்துள்ளார் யோகி பாபு.

-விளம்பரம்-
Advertisement