தமிழில் எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவரது உண்மையான ப்ளஸ்ஸே இவரது உருவ அமைப்பு என்றே கூறலாம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரது தோற்றம் பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி வருகிறது.
தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போது பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றார்.
இதையும் படியுங்க : 19 படங்கள் கைவசம்..!விஜய் 63 படத்தில் யோகி பாபு சம்பளம் எவ்வளவு தெரியுமா..!கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!
இந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் நடித்த யோகி பாபு, தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 63’ படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.இந்தாண்டு எண்ணெற்ற படங்களில் நடித்த யோகி பாபு சமீபத்தில் வெளியாகி விருது பெற்ற
‘பரியேறும் பெருமாள்’ படத்திலும் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவரது காமெடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யோகி பாபு இந்த வருடத்தில் அவர் நடித்த படங்களிலேயே ‘பரியேறும் பெருமாள்’ தான் பிடித்திருந்தது என்று கூறியுள்ளார்.