போன வருடம் தல தீபாவளி, இந்த வருடம் வீட்டில் மற்றொரு புது வரவு – யோகிபாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்.

0
323
- Advertisement -

நடிகர் யோகி பாபுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ள தகவல் வெளியானதை தொடர்ந்து திரை உலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவிக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ஆரம்பத்தில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதிலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த மான் கராத்தே படத்தில் யோகி பாபு காமெடி ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதை தொடர்ந்து இவர் தன்னுடைய நகைச்சுவை மூலம் ரசிகர்கள் மத்தியில் மெல்ல மெல்ல ஈர்க்கப்பட்டு இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது யோகி பாபு இல்லாத படமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்களில் யோகி பாபு நடித்துக் கொண்டிருக்கின்றார். மேலும், இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

யோகிபாபு திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவரின் கால்சீட் கிடைக்காதா? என்று பல இயக்குனர்கள் ஏங்குகின்றனர். அந்த அளவிற்கு பிஸியான நடிகராக கலக்கி கொண்டு இருக்கிறார். மேலும், இவர் சில ஆண்டாகவே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதிலும் இவர் ஹீரோவாக நடித்து வெளியான மண்டேலா திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது முதன்மை கதாப்பாத்திரத்தில் யோகி பாபு நடித்து வருகிறார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு என்ற படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார்.

யோகி பாபு நடிக்கும் படம்:

இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்குகிறார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிஸ்ட் படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி யோகி பாபு பல்வேறு படங்களில் ஹீரோவாகவும், காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார். இதனிடையே இவர் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக தன்னுடைய நடந்தது.

-விளம்பரம்-

யோகி பாபுவின் முதல் குழந்தை:

கொரோனா ஊரடங்கு காரணமாக இதில் பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இருந்தாலும், பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். பின் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனது மகனுக்கு யோகி பாபு அவர்கள் விசாகன் என்ற தமிழ் கடவுள் முருகனின் பெயரை வைத்தார். மேலும், தங்களுடைய மகனின் முதலாம் ஆண்டு பிறந்த நாளை கூட கோலாகலமாக யோகி பாபு கொண்டாடியிருந்தார். இதற்கு திரை உலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

யோகி பாபுவிற்கு பிறந்த இரண்டாவது குழந்தை:

இந்த நிலையில் யோகி பாபுவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. அதாவது நேற்று தீபாவளி திருநாள் பண்டிகை அன்று யோகி பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் என பலரும் யோகி பாபுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement