பட போஸ்டரை வெளியிட்ட படக்குழு – நான் இந்த படத்தில் நடிக்கவே இல்லை என்று ஷாக் கொடுத்த யோகி பாபு

0
496
yogi babu actor

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு. சமீபத்தில் யோகி பாபுவின் புதிய படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. ரை ட் ஆர்ட்ஸ் என்ற நிறுவனதின் தயாரிப்பில் தயாராகியுள்ள ‘தெளலத்’ என்ற படத்தினை ஷக்தி சிவன் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார். இதில் ராஷ்மி கெளதம், ஜெயபாலன், ஐசக், வைரவன், அஜய் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் யோகி பாபுவை மட்டும் மையப்படுத்தி போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் பலரும் யோகி பாபு இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரோ என்று நினைத்து வந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்டரை பார்த்து ஷாக்காகியுள்ள யோகி பாபு, இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யோகி பாபுவிற்கு இது போன்ற பிரச்சனைகள் புதிதான விஷயம் அல்ல. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படத்தில் கூட, நான் தான் கதாநாயகன் என விளம்பரப்படுத்துவதாக யோகி பாபு வேதனை தெரிவித்தார். இதனால் தனது இதர படங்கள் பாதிக்கப்படுவதாகவும், இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம் என வேண்டுகோளும் விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement