சர்க்கார் படத்தை கலாய்த்து வந்த மீம்..!விஜய்க்கு அனுப்பிய யோகி பாபு..!விஜய் ரியாக்ஷன்..!

0
571

தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றனர்.

Yogi Babu

இதில் காமெடிய நடிகர் யோகி பாபு விஜய் நடித்து வரும் “சர்கார்” படத்திலும், அஜித் நடித்து வரும் “விஸ்வாசம் ” படத்திலும் காமெடியனாக நடித்துவருகிறார். மேலும், “குர்கா” என்ற புதியப்படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது சிம்பு நடித்துவரும் புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

நடிகர் யோகி பாபு விஜய் நடித்த மெர்சல், சர்கார் ஆகிய இரண்டு படங்களிலுமே நடித்துள்ளார். சர்கார் படம் வெளியான போது அதனை கலாய்த்து பல மீம்கள் வந்தது அதில் ஒன்றை நடிகர் விஜய்க்கு பார்வெர்ட் செய்துள்ளார் யோகி பாபு.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யோகி பாபு பேசுகையில், சர்கார் படத்தில் விஜய் ஓட்டை நான் கள்ள ஓட்டை போட்டு விடுவேன் அதனை கலாய்த்து விஜய் ஓட்டை போடாமல் இருந்திருந்தால் அவர் ஓட்டு போட்டுவிட்டு வெளிநாடு சென்றிருப்பார் என ஒரு மீம்ஸ் வந்தது. அதனை நான் விஜய் சாருக்கு அனுப்பினேன், அதனை அவர் பார்த்துவிட்டு அவர் சிரித்தார்.