நானும் படிச்சிருக்கலாமோனு இப்போ வருத்தப்பட்டேன்.! யோகி பாபு

0
665
yogi-Babu
- Advertisement -

தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

- Advertisement -

இதில் காமெடிய நடிகர் யோகி பாபு சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” என்ற படத்தில் நயன்தாராவை காதலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து நயன்தாராவுடன் லவ் பாடல்களிலும் நடித்திருந்தார்.

தற்போது விஜய் நடித்து வரும் “சர்கார்” படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்நிலையில் மாறி செல்வராஜ் இயக்கத்தில், சசி குமார் நடித்து வரும் படத்திலும் நடித்து வருகிறார் யோகி பாபு. சமீபத்தில் இந்த படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த யோகி பாபு, நான் பத்தாம் வகுப்பு வரை தான் படைத்துளேன். ஆனால், இந்த படத்தில் ஒரு கல்லூரி மாணவனாக நடித்துள்ளேன். நான் மாணவனாக நடித்து மிகவும் ஒரு மறக்க முடியாத அனுபவம்.

-விளம்பரம்-

Yogi Babu

இந்த படத்தில் ஒரு 32 நாட்கள் கல்லூரியில் மாணவனாக வலம் வந்த போது தான் நானும் படித்திருக்கலாமே என்ற ஒரு எண்ணம் தோண்றியது. இந்த படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எனது நடிப்பு நன்றாக இருக்கிறது என்று என்னை கட்டிபிடித்து பாராட்டினார் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.

Advertisement