யோகி பாபுவுக்கு கல்யாணமா..? பெண் யார்..? அவரே சொன்ன தகவல்..!

0
388
Yogi-Babu

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக இருந்த வடிவேலு, சந்தானம் ஆகியோர் சற்று இடையில் ஒய்வு பெற்றதால். அவர்களின் வெற்றிடத்தை பல காமெடி நடிகர்கள் பூர்த்தி செய்தனர். அந்த வரிசையில் காமெடி நடிகர் யோகி பாபுவும் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் அடைந்துள்ளார்.

Yogi Babu

சமீபத்தில் நடிகை நயன்தாராவின் ‘கோல மாவு கோகிலா’ என்ற படத்தில் இருந்து வெளியான ‘கல்யாண வயசு’ என்ற பாடலில் நயன்தாரவுடன் டூயட் பாடி அசத்தி இருந்தார். சமீபத்தில் இந்த படத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உண்மையாகவே இவருக்கு கல்யாண வயசு வந்து விட்டது போல.

ஆம், நடிகர் யோகி பாபுவிற்கு பெண் தேடும் படலத்தை அவரது வீட்டில் கிளப்பி விட்டிருக்கிறார்களும். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் யோகி பாபுவிடம் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா, எப்போது திருமணம் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த யோகி பாபு “இந்த மூஞ்ச பாத்தா லவ் பண்ற மாதிரியா இருக்கு. வீட்ல பொண்ணு பாத்துட்டு இருக்காங்க.” என்று தெரிவித்துள்ளார்.

Yogi Babu

காமெடி நடிகரான யோகி பாபு பல்வேறு தமிழ் திரைபடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான நடிகர் விஜய் சேதுபதியின் ‘ஜூங்கா, நடிகை திரிஷாவின் மோகினி ‘ ஆகிய இரண்டு படங்களில் காமெடியனாக நடித்து கலக்கியுள்ள இவர், விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்திலும் காமெடியனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.