இவங்க தொல்லை தாங்க முடில..! இதையெல்லாம் யாருடா பண்றது.! whatsapp கிண்டல் செய்த யோகி பாபு

0
469
yogi-babu-actor

சமீப காலமாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் என்ற பெயரில் வலம் வரும் சில விடியோக்கள் பார்ப்பவர்களை காண்டாக செய்கிறது. அதிலும் வாட்ஸ் அப் ஸ்டேட்ஸில் ரயில் விடுவது. கொரியன் படங்களை வைப்பது என்று அட்ரஸிட்டிக்கல் தாங்க முடியவில்லை. இதுகுறித்து நடிகர் யோகி பாபுவே தனது ஆதங்கத்தை ட்விட்டர் பக்கத்தில் தெறிவித்துள்ளார்.

Yogi Babu

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக இருந்த வடிவேலு, சந்தானம் ஆகியோர் சற்று இடையில் ஒய்வு பெற்றதால். அவர்களின் வெற்றிடத்தை பல காமெடி நடிகர்கள் பூர்த்தி செய்தனர். அந்த வரிசையில் காமெடி நடிகர் யோகி பாபுவும் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் அடைந்துள்ளார். இவரது முக்கிய அம்சமே இவர் செய்யும் காமெடிகள் அவ்வளவாக எரிச்சலை தருவது இல்லை என்பது தான் உண்மை.

நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘கோல மாவு கோகிலா’ என்ற படத்தில் நடித்துள்ள யோகி பாப, படத்தில் நயன்தாராவுடன் ஒரு டூயட் பாடலை தனியாக பாடி இருந்தார். சமீபத்தில் வெளியான ‘கல்யாண வயசு ‘ பாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை பார்த்து சற்று எமோஷன் ஆகிவிட்டார் போல இதனால் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் வெறுத்து ஒரு பதிவை போட்டுள்ளார் யோகி பாபு.

அதில்’இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போட் ரவங்க தொல்ல தாங்க முடியல

ஃபாரின் காரனுக்கு தமிழ் பாட்டு, தமிழ் காரனுக்கு இங்கிலிஷ் பாட்டு. சத்தியமா முடியல, இதெல்லாம் யாரு டா எடிட் பண்றது ‘ கோபத்துடன் கேட்டுள்ளார் யோகி. அதெல்லாம் இருக்கட்டும் ஒரு வேளை கொரியன் பாட்டைத்தான் இங்கிலிஷ் பாட்டென்று நினைத்து கொண்டிருக்கிறாரோ. பாவம் அவரயே கோபடுத்திட்டங்களே மக்களே.