தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றனர்.
இதில் காமெடிய நடிகர் யோகி பாபு விஜய் நடித்து வரும் “சர்கார்” படத்திலும், அஜித் நடித்து வரும் “விஸ்வாசம் ” படத்திலும் காமெடியனாக நடித்துவருகிறார். மேலும், “குர்கா” என்ற புதியப்படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது சிம்பு நடித்துவரும் புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கி வரும் பெயரிடபடாதா புதிய படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான “பவன் கல்யாண்” என்ற படத்தின் ரீ மைக்கை தான் இயக்குனர் சுந்தர் சி, சிம்புவை வைத்து எடுத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 17-ம் தேதி ஜார்ஜியாவில் தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. தனுஷ் நடித்துள்ள “எனை நோக்கி பாயும் தோட்ட” படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மேகா ஆகாஷ் தான் இந்த படத்திலும் கதாநாயகியாக கமிட் ஆகியிருந்த நிலையில் தற்போது யோகி பாபுவும் படக்குழுவில் இணைந்துள்ளார்.