தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு.
நடிகர் யோகி பாபுவிற்கு திருமணம் எப்போ?எப்போ? என்று பல கேள்விகள் சோசியல் மீடியாவில் வந்து இருந்தது. தற்போது ஒரு வழியாக நடிகர் யோகி பாபு அவர்களுக்கு கடந்த வாரம் திருமணம் நடந்து முடிந்தது. இவர் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். யோகி பாபு அவர்களுடைய குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக தன்னுடைய திருமணத்தை செய்து கொண்டார். இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
நெருங்கிய உறவினர் மற்றும் சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பிரபல பத்திரிகைக்கு நடிகர் யோகி பாபு தன் மனைவி குறித்து பேட்டி அளித்து இருந்தார். இது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், இவர்களுடைய திருமண வரவேற்பு விழா மார்ச் மாதம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு அவர்கள் தன்னுடைய மனைவி பார்கவி உடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று உள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் திருமணம் முடிந்தவுடன் நடிகர் யோகி பாபு புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்கிறார் என்று கூறி வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் நடிகர் யோகி பாபு அவர்கள் முருகனின் தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே இவர் முருகர் வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.