விசுவாசம் படம் எப்படி இருக்கு..? யோகி பாபுவிடம் கேட்ட கேள்விக்கு..ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே..!

0
1089
Yogi-Babu
- Advertisement -

பருமனான உடற்தோற்றம் , பரட்டை முடி, வித்தியாசமான “Body Language ” போன்றவைகளின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் யோகி பாபு. இவர் நடிக்க ஆரம்பித்த போது சிறிய வேடங்களே கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்தி தனக்கென இப்போது ஒரு அடையாளத்துடன் சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

-விளம்பரம்-

Yogi Babu

- Advertisement -

இவரது ஆரம்ப காலங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்த இவர், தற்போது படத்தின் முக்கிய நகைச்சுவை நடிகராக விஸ்வரூபம் எடுத்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது கோலமாவு கோகிலா திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் அவரிடம் விசுவாசம் படம் எப்படி இருக்கிறது என கேட்ட நிருபரிடம், அவர் மெல்லிய புன்னகையுடன் சற்று யோசித்து விசுவாசம் விசுவாசமாக இருக்கிறது என எப்போதும் போல அவருடைய பாணியில் கலாய்த்துவிட்டார். மேலும், தல அஜித் ரொம்ப நல்லவர் என்றும், நானும் அவருடன் ஜாலியாக நடித்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

-விளம்பரம்-

தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்து விட்ட யோகி பாபு, விஜய் அஜித் போன்ற பெரிய மாஸ் நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

Advertisement