அண்ணன், கோவில் பூசாரி, தம்பி சினிமாவில், – தன் சகோதர சகோதரிகளுடன் யோகி பாபு எடுத்த புகைப்படம். அண்ணன் அளித்த பேட்டி இதோ.

0
1770
yogibabu
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். மேலும், இவரின் கால்சீட் கிடைக்காதா? என்று பல இயக்குனர்கள் ஏங்குகின்றனர். 2009 ஆம் ஆண்டு தான் நடிகர் யோகிபாபு அவர்கள் சினிமா உலகிற்கு முதன் முதலாக காலடி எடுத்து வைத்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு இவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். யோகி பாபு.அவர்கள் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். யோகி பாபு அவர்களுடைய குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக தன்னுடைய திருமணத்தை செய்து கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யோகி பாபுவின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் யோகிபாபுவின் அண்ணன் குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

யோகி பாபு அண்ணா சக்தி யோகி ராஜா:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்நாகலாபுரம் மேடு தான் யோகிபாபுவின் சொந்த ஊர். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் தான் யோகி பாபு அண்ணா சக்தி யோகி ராஜா. இவர் ஒரு கோயில் கட்டி ஆன்மிகத் தொண்டு செய்து வருகிறார். இவர் வராகி அம்மனின் தீவிர பக்தர். அதனால் சக்தி யோகி ராஜா வராகி அம்மனுக்கு ஆலயம் அமைத்து இறைத்தொண்டு புரிந்து வருகிறார். வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களிலும், பௌர்ணமி, அமாவாசை நாட்களிலும் கோயில் வளாகத்திலேயே அருள்வாக்கு சொல்லி வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is image-42.png

சக்தி யோகி ராஜா அளித்த பேட்டி:

இந்நிலையில் இவரிடம் சமீபத்தில் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறியது, 20 வருஷத்துக்கு மேலாக நான் ஆன்மிகத்தில் இருக்கிறேன். அதற்கு முன்னாடி நான் டிராவல்ஸ் வைத்திருந்தேன். இந்த ஆன்மீகம் நான் ஆரம்பித்தது கிடையாது. என்னுடைய முன்னோர்கள் காலத்திலிருந்து இந்த மாதிரி ஆன்மீகத்தில் இருக்கிறோம். அதேபோல் எங்கள் தாத்தா காலத்தில் ஒரு நாடக கம்பெனி இருந்தது. அப்போதிலிருந்தே எங்கள் குடும்பம் கலைக்குடும்பம். ஆனால், நான் சினிமாவில் நடித்தது கிடையாது. எனக்கு சின்ன வயதிலிருந்தே ஆன்மிகம் தான்.

-விளம்பரம்-

எனக்கு பிடித்த அம்மன்:

மேலும், எனக்கு ரொம்ப பிடித்த ஊர் திருவாலங்காடு காளிகாம்பாள் கோயில், மேல்மலையனூர். எங்களுடைய குலதெய்வம் பெரியாண்டவர் பச்சையம்மன். எங்களுடைய குலதெய்வம் பெரியாண்டவர் கோயில் விசேஷமாக செய்வார்கள். அதேபோல் வராகியும் எங்களுக்கு குலதெய்வம் தான். அவளுடைய சாதனைகள் ஏராளம் உண்டு. நானும் அவளை உணர்ந்து இருக்கிறேன். அவளைத் தேடி கோயிலுக்கு வரும் மக்களுக்கு அருள்வாக்கு சொல்வார். அத்தனையும் நடந்து நல்லது கிடைத்தவுடன் எல்லோரும் கோயிலுக்கு வருவார்கள். அதுவே அவள் இருப்பதற்கான உதாரணம். முன்ஜென்ம கர்ம வினை நீக்கக் கூடியவள் வராகி.

அம்மனின் சாதனை கூறிய சக்தி யோகி ராஜா:

இவை தவிர பெரிய ஆண்டவர், கருமாரி, காளியம்மன் இந்த சாமிகள் எல்லாம் எனக்கு ஈடுபாடு இருக்கிறது.
நான் எதையும் சாதிக்க விருப்பமில்லை. அம்மாள் சாதிப்பதை நான் வேடிக்கை பார்க்கிறேன். அவள் என்ன செய்கிறாள் என்பதை நான் பார்க்கிறேன். மனிதனால் எந்த சாதனையும் செய்ய முடியாது. என்னை பொறுத்தவரையில் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவள் என்ன சாதிக்கனும் என்பதை என் பக்கத்தில் இருந்து பார்க்கிறேன் என்று அவர் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement