யோவ் பெரிய மனுஷா..? உன்கிட்ட போய் கேட்டேன் பாரு.! வெங்கட் பிரபுவை மிரட்டிய ரசிகை.!

0
721
venkat-prabu

இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் அனைத்தும் ஹிட் தான். தற்போது நடிகர் சிலம்பரசனை வைத்து “மாநாடு” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர்கள் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான இயக்குனராக இருந்து வரும் இவரை ட்விட்டரில் ரசிகை ஒருவர் திட்டி தீர்த்துள்ளார். சமீபத்தில் கயல்விழி என்ற ரசிகை ஒருவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் ட்விட்டர் பக்கத்தில் “இன்று என்னுடைய பிறந்தநாள் சார், என்னை வாழ்த்துங்கள். நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை’ என்று ட்வீட் செய்துள்ளார்.

ஆனால், வெங்கட் பிரபுவிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராததால் கடுப்பான கயல்விழி “யோவ் பெரிய மனுஷா, உங்ககிட்ட போய் கேட்டேன் பாரு.” என்று கடுப்பாகியுள்ளார். பின்னர் அந்த டீவீட்டை பார்த்த வெங்கட் பிரபு “பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரோ, உங்களோட முதல் டீவீட்ட கவனிக்கல, அதுக்கு போய் இப்படி திட்டறீங்களே. உங்க மனசு போல இல்லமா உண்மையிலே சந்தோசமா இருங்க. வாழ்த்துக்கள் ” என்று ரீ-ட்வீட் செய்திருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு மீண்டும் பதிலளித்த கயல்விழி”எனக்கு நல்ல மனசு தான். அன்னைக்கு “மாநாடு” க்கு ஒரு எடிட் பண்ணி டிவிட் போட்டேன்.கண்டுக்கல அதான் இதயும் கண்டுக்கலயோனு காண்டாகிட்டேன். தப்பா நினச்சுக்க வேண்டாம். சாரி & தேங்க்ஸ்” என்று பதிவிட்டதோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள “மாநாடு ” படத்தின் போஸ்டர் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement