வாட்ஸ் அப்பில் உங்களை பிளாக் செய்தவர்களுடனும் நீங்கள் சாட் செய்யலாம்.! எப்படி தெரியுமா?

0
1080
Whatsapp
- Advertisement -

தற்போது உள்ள நவீன உலகத்தில் அனைவரது கையிலுமே ஸ்மார்ட் போன் உள்ளது. மேலும்,ஸ்மார்ட் போன் உள்ள அனைவரின் போனிலும் வாட்ஸ்அப் என்ற செயலி கண்டிப்பாக இல்லாமல் இருக்காது. இது வந்த பிறகு பலரும் மெசேஜ் என்ற ஒன்றை பயன்படுத்துவதை யே நிறுத்திவிட்டனர்.

-விளம்பரம்-

சுலபமான டிசைன், கண் கவர் சிறப்பு அம்சங்கள் என்று பல உள்ளது. அதே போல பாதுகாப்பிற்கும் பஞ்சம் இல்லை. இதில் உள்ள ப்ளாக் என்ற வசதியை பயன்படுத்தி நமக்கு தேவை இல்லாதவர்களை நாம் பிளாக் செய்து விடலாம்.

- Advertisement -

ஒரு முறை ப்ளாக் செய்து விட்டால் அந்த நபரால் நமக்கு மெசேஜ் அனுப்ப முடியாது. ஆனால், அதற்கும் ஒரு வழி இருக்கிறது. முதலில், நீங்கள் ப்ளாக் செய்யப்பட்டால், நீங்களாகவே அந்த ப்ளாக் லிஸ்டில் இருந்து வெளியேறவே முடியாது. ஆனால், உங்களை ப்ளாக் செய்தவரும் நீங்களும் ஒரு க்ரூப் சாட்-ல் இருந்தால் அதன் மூலமாக நீங்கள் பழையபடி உங்கள் உரையாடல்களைத் தொடரலாம்.

-விளம்பரம்-

அல்லது, நீங்களாகவே ஒரு க்ரூப் ஆரம்பித்து உங்களை ப்ளாக் செய்தவரையும் ஒரு மூன்றாவது நண்பர் மூலம் இணைத்து சாட் செய்யலாம். ஆனால், உங்களுடன் எந்த க்ரூப்-லும் இல்லாத ஒரு நண்பர் உங்களை ‘ப்ளாக்’ செய்தால் வேறு இல்லை.

நீங்கள் காலத்துக்கும் ‘ப்ளாக்’ லிஸ்ட் தான். அதேபோல், உங்களை ப்ளாக் செய்த நண்பர் நீங்கள் இருக்கும் க்ரூப்களில் இருந்து வெளியேறிவிட்டாலும் நீங்கள் நிரந்தர ப்ளாக் லிஸ்ட் தான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!

Advertisement