“நீட் தேர்வு இல்லையேன்றாலும் அந்த மாணவன் மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்க முடியாது என்று நாராயணன் திருப்பதி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் மாணவர் ஜெகதிசன். இவர் மூன்று வருடங்களாக நீட் தேர்வு எழுதி கொண்டு இருந்துள்ளார். அதில் அந்த மூன்று முறையும் தேர்ச்சியடையததால் விரக்தியில் மாணவர் ஜெகதீசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் சோகத்தில் உள்ளாகியது.

இந்த மாணவர் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் சைதன்யா பள்ளியில் பயின்று 500க்கு 424மதிப்பெண்களை பெற்றார். அவர் அதன் பிறகு எழுதிய முதல் மற்றும் இரண்டாம் நீட் தேர்வில் 100க்கும் குறைவான மதிப்பெண்களையே பெற்றார். மூன்றாவது முயற்சியில் 300 மதிப்பெண்களை மட்டுமே பெற்றார் என்று அவரது தந்தை கூறியிருந்தார். நீட் தேர்வு இல்லையென்றால் அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்திருக்க வாய்ப்பே கிடையாது என்னென்றால் 424 மதிப்பெண்களை மட்டுமே எடுத்திருக்கிறார். மாநில பாடத்திட்டத்தில் படிதிருந்தால் குட அவருக்கு கவுன்சிலிங் மூலம் கூட அவருக்கு இடம் கிடைத்திருக்காது.

Advertisement

அந்த மாணவன் முதல் இரண்டு தேர்வுகளிலும் அவர் 100 க்கும் குறைவான மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் மூன்றாவது 300 மதிப்பெண்களை எடுத்தார். அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு இந்த ஆண்டுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் BC-560 MBC-532 SC-452 SCA-383 BCM- 542 OC-606 ST-355 ஆகவே அவர் இதில் எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் நீட் தேர்வு இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் அவருக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைத்திருக்க வாய்ப்பே கிடையாது.

நீட் தேர்வு இருந்ததால்தான் அவர் மேலும் 3 ஆண்டுகள் இந்த தேர்விற்கு படிக்க முயற்சி செய்திருந்தார். நீட் தேர்வு இல்லையென்றால் அவருக்கு மூன்று வருடங்கள் முன்பே சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் அவர் பெற்ற 424 மதிப்பெண்களுக்கு அரசு கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.இந்த மாணவனின் இறப்பை வைத்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஏதோ மாணவன் நீட் தேர்வினால் உயிரிழந்தார் என்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டனர். தமிழக ஊடகங்களும் இதை தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது.

Advertisement

தற்கொலை செய்து கொண்ட இருவரின் இழப்பை தாங்க முடியாத ஒன்று தான். சில அரசியல் வாதிகள் இதை வைத்து கொண்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். நீட் தேர்வு இல்லாமல் இருந்தால் கூட 5000 இடங்களை மட்டுமே கொண்ட அரசு மருத்துவ கல்லூரியில் 500க்கு 424 மதிப்பெண்களுக்கு அதிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர் அரசு கல்லூரியில் அவர் பயின்றிக்கவே முடியாது.

Advertisement

இரு உயிர்கள் இழந்துள்ளது அது ஈடு செய்ய முடியாத ஒன்று தான் அதை வைத்து அரசியல் ஆதாயத்துக்காக மரணங்களை வைத்து அரசியல் செய்து வருகிறது. உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்து நியாமற்ற பொறுப்பற்ற அராஜக செயல்களை அவர்கள் செய்து வருகிறார்கள். என்று அவர் கூறியுள்ளார்.                      

Advertisement