பொதுவாகவே சினிமா உலகில் நடிக்க வாய்ப்புகள் தருவதாக கூறி நடிகைகளை பயன்படுத்திக் கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. சமீப காலமாக இது குறித்து மீடு பிரச்சனை சோசியல் மீடியாவில் தலைவிரித்து ஆடுகின்றது. நடிகை ஸ்ரீரெட்டி முதல் சின்மயி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த மீடு பிரச்சனையில் ஈடுபட்டு உள்ளார்கள். முன்னணி நடிகைகள் முதல் துணை நடிகைகள் வரை என பலரும் இந்தப் பிரச்சினையை சந்தித்து உள்ளார்கள். அந்த வகையில் ஒரு நடிகை தன்னை கதாநாயகியாக படத்தில் நடிக்க வைப்பதாக கூறி பிரபல இயக்குனர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மீடூவில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

பிரசாந்த் ஷாலினி – பிரியாத வரம் வேண்டும்

மலையாள சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர் கமல். இவர் தமிழில் பிரசாந்த், ஷாலினி நடித்த பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தை இயக்கி இருந்தார் . இயக்குனர் கமல் அவர்கள் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், பிருத்விராஜ், திலீப் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார்.

Advertisement

இவர் இதுவரை 45-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். மேலும், இரண்டு வருடங்களுக்கு முன்பு இவரது இயக்கத்தில் வெளிவந்த ஆமி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், முரளி கோபி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த தொடர்ந்து இயக்குனர் கமல் அவர்கள் பிரணய மீனுகளுடே என்ற படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி இயக்குனர் கமல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை ஒருவர் தற்போது குற்றம் சாட்டி உள்ளார். இளம் நடிகை அளித்த புகாரில் கூறி இருப்பது, கமல் அவர்கள் ஆமி படத்தை இயக்கி கொண்டு இருக்கும் போதே எனக்கு அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இருந்தார்.

Advertisement

ஒரு நாள் கமல் எனக்கு போன் செய்து படம் விஷயமாக பேசணும் வீட்டுக்கு வா என்று அழைத்து இருந்தார். நானும் கமல் வீட்டுக்கு போனேன். பின் கமல் என்னிடம் தவறாக நடந்தார். என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதுமட்டும் இல்லாமல் ஆமி படப்பிடிப்பின் போதும் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். அவர் மிகவும் மோசமான மனிதர்.

Advertisement

இயக்குனர் என்ற போர்வையை போதிக் கொண்டு தவறாக நடக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும், இளம் நடிகை அவருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளார். இந்த நியூஸ் கேரளாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இயக்குனர் கமலிடம் கேட்டதற்கு அவர் அளித்து உள்ள பதில், என்மீதான புகார் ஆதாரமற்றது. எனது பெயரை கெடுக்கும் செயல். எனக்கு வக்கீல் நோட்டீசு வந்தது. இது பொய்யான புகார் என்று கூறி உள்ளார்.

Advertisement