கே ஜி எஃப் 2 படம் திரையிடும் போது தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார்.
இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎப் 2 படம் வெளியாகியுள்ளது. படத்தில் கருடனை
கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவங்குகிறார் யாஷ் . ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.
கே ஜி எஃப் 2 கதை:
இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உள்ளது. விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.
கேஜிஎப் 2 படம் பற்றிய தகவல்:
இதுவரை கே ஜி எஃப் 2 படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கேஜிஎப் 2 படம் பார்க்க வந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ள தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஹாவேரியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு இளைஞர் ஒருவர் கேஜிஎப் 2 படம் பார்க்க வந்து உள்ளார். அந்த இளைஞர் பெயர் வசந்தகுமார் ஷிவாபூர். இவர் முகலி கிராமத்தைச் சேர்ந்தவர். மேலும், இவர் கேஜிஎப் 2 படத்தை பார்க்க தனது நண்பர்களுடன் தியேட்டருக்கு வந்துள்ளார்.
இளைஞர் மீது துப்பாக்கி சுடுதல்:
அப்போது வசந்தகுமார் தனது கால்களை முன் இருக்கையில் வைத்ததால் அங்கு அமர்ந்திருந்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தியேட்டரை விட்டு அந்த நபர் வெளியேற்றி இருக்கிறார். பின்னர் மீண்டும் திரையரங்குக்குள் வந்த அந்த மர்ம நபர் வசந்தகுமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் போலீஸார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட இளைஞர் நடிகர் யாஷின் தீவிர ரசிகர். அதோடு இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் தீவிர விசாரணை:
துப்பாக்கிச் சூட்டினை நடத்தியவர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க போலீஸார் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்து உள்ளவர்களின் பட்டியலும் சரிபார்க்கப்பட்டு வருகிறது என்று காவல்துறை அறிவித்துள்ளது. பின் போலீஸ் விசாரணையில் நேரில் பார்த்த சாட்சி மூன்று முறை துப்பாக்கி சூடு நடந்ததாகவும், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது என்றும் தெரிய வந்து உள்ளது. தற்போது அந்த துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காயமடைந்த நபருக்கும், சுட்ட நபருக்கும் முன்விரோதம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.