கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் தற்போது மீண்டும் இந்தி எதிர்ப்பு அரசியல் தலை தூக்க துவங்கி உள்ளது.

சமீபத்தில் கூட தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா அணிந்த டீ-ஷர்ட் வாசகம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

Advertisement

இந்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜா திருவள்ளுவர் புகைப்படம் அச்சிடப்பட்ட புகைப்படம் அடங்கிய டீ சர்ட் ஒன்றை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் நான் தமிழ் பேசும் இந்தியன் என்று பொருள்படும் வகையில் “ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யுவனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் செயலை திமுக எம்பி கனிமொழி பாராட்டி இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பிரபல இயக்குனரான வெற்றிமாறன், டெல்லி விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று சொன்னதால் அங்கே இருந்த அதிகாரி ஒருவர் அவரை தமிழன் என்றால் தீவிரவாதி என்று கூறி பல மணி நேரம் நிற்க வைத்து அவமானபடுத்தியதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement