பவதாரணி குரல் இப்படி வரும் என்று நினைக்கவே இல்லை- யுவன் சங்கர் ராஜாவின் உருக்கமான பதிவு

0
233
- Advertisement -

விஜய்யின் ‘கோட்’ படத்தில் பவதாரணி குரல் பயன்படுத்தியது குறித்து யுவன் சங்கர் ராஜா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது.

-விளம்பரம்-

இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் ‘கோ’ட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். ஏற்கனவே இந்தப் படத்தினுடைய ‘விசில் போடு’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

விஜய் கோட் படம்:

இந்த நிலையில் நேற்று விஜயின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள், நிர்வாகிகள் என பலரும் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் விஜயின் ‘கோட்’ படத்திலிருந்து ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை விஜய் பாடுகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் வந்திருக்கிறது. இந்தப் பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

பவதாரணி குரல் தொடர்பான தகவல்:

இது ஒரு பக்கம் இருக்க, இந்த பாடல் பவதாரணி இறப்பதற்கு முன்பே பாடிவிட்டாரா? ஏஐ மூலம் செய்யப்பட்டதா?’என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக வெளியான தகவலில், மறைந்த பாடகி பவதாரணி குரல் ஏஐ மூலம் தான் மறு உருவாக்கம் செய்து இருக்கிறார்கள். இதற்கு ‘TimelessVoices.ai’ என்ற நிறுவனம் உதவி இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் ஆலோசகர் கிருஷ்ணா சேட்டன்.

-விளம்பரம்-

AI தொழில்நுட்பம் குறித்து சொன்னது:

இதே நிறுவனத்தின் உதவி உடன் தான் ‘லால் சலாம்’ படத்தில் இடம்பெற்ற ‘திமிறி எழுடா’ என்ற பாடலில் பாடகர் ஷாகுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்யா ஆகியோருடைய குரலை ஏ ஆர் ரகுமான் மறு உருவாக்கம் செய்திருந்தார். அதோடு கிருஷ்ணா சேட்டன், ஏ ஆர் ரகுமான் உடன் மிக்ஸிங் இன்ஜினியராக பல படங்களில் பணியாற்றி இருந்தார். இவர் திரைப்படப் பாடல்களில் பயன்படுத்தும் அளவுக்கு துல்லியமாக குரல்களை மறு உருவாக்கம் செய்யும் பணிகளில் கைதேர்ந்தவர். மறைந்த தலைவர்கள், கலைஞர்கள் உடைய குரல்களை உரிமை மீறாமல் அவர்கள் குடும்பத்தாரின் அனுமதியுடன் இந்த நிறுவனம் செய்து கொண்டிருக்கின்றது.

யுவன் சங்கர் ராஜா பதிவு:

மேலும், இது தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில், பெங்களூரில் இந்த பாடலை இசையமைத்த போது வெங்கட் பிரபுவுக்கும் எனக்கும் இந்த பாடலில் பவதாரணி பாடினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பவதாரணி சிகிச்சை பெற்று திரும்பி வந்த பிறகு ரெக்கார்ட் செய்யாமல் இருந்தோம். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் இறந்துவிட்டார். AI மூலம் அவருடைய குரலை இப்படி பயன்படுத்துவேன் என்று நாங்கள் நினைக்கவில்லை. இதை சாத்தியப்படுத்த உதவியாக இருந்த அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் நன்றி, இது எனக்கு ஆனந்தம் கலந்த சோகமான தருணம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement