வீட்டிலேயே இத்தனை கிலோ போதை பொருள் வைத்திருக்கேன் – யுவன் மனைவி கொடுத்த ஷாக். வீடியோ இதோ.

0
2332
yuvan
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜாவின் மகன் தனது தந்தைக்கு நிகராக ஒரு இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தனக்கென ஒரு பாணியில் கிட்டத்தட்ட தன் தந்தையை ஒத்தது போல இசையமைக்கும் யுவனுக்கும் ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகும். அரவிந்தன் துவங்கி தற்போது வரை யுவன் எண்ணெற்ற இசை ஆல்பங்களை கொடுத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா கடந்த 2003 ஆம் ஆண்டு சுஜயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

-விளம்பரம்-
Zafroon Nizar (Yuvan Shankar Raja Wife) Wiki, Biography, Age, Images - News  Bugz

அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்ட யுவன் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஒரு மகளும் பிறந்தார். மூன்றாம் திருமணத்திற்கு முன்பாகவே யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை ஏற்று தனது பெயரை அப்துல் காலிக் என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

இதையும் பாருங்க : தமிழ் நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்.யார் யார் எத்தனை கோடி வாங்குகிறார்கள் தெரியுமா?

- Advertisement -

இஸ்லாம் பெண்ணை மூன்றாம் திருமணம் செய்த்க்கொள்ள தான் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்ற விமர்சனமும் எழுந்தது. இதற்கு பதில் அளித்து இருந்த யுவனின் மனைவி, நான் யுவனை சந்திப்பதற்கு 3 வருடங்களுக்கு முன்பாகவே அவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வந்தார். இப்படி ஒரு நிலையில் யூடுயயூபில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு யுவன் மனைவி பதில் அளித்துகொண்டிருந்தார்.

அப்போது போதைப்பொருள் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்களா? என்று அதிர்ச்சியான கேள்வியை கேட்டிருந்தார். “யுவனை தானே நீங்க ட்ரக்ன்னு சொல்றீங்க, ஆமா வீட்லேயே 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன். எங்க போனாலும், என்னோட ட்ரக், விட்டமின்ஸ், நியூட்ரியண்ட்ஸ் எல்லாத்தையும் கூடவே எடுத்துட்டு போறேன்” என புத்திசாலி தனமாக பதில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement