சினிமாவில் உள்ள நடிகைகளின் சம்பளங்கலங்கள் கோடிகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அதில் ஒரு சில நடிகைகள் ஒரு விளம்பரங்களில் நடிக்க வாங்கும் சம்பளம், மற்ற நடிகைகள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்திற்கு ஈடாக இருக்கிறது. சினிமாவில் ஆரம்பத்தில் லட்ச கணக்கில் சம்பளம் வாங்கிய நடிகைகள் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர். அதே போல நடிகைகளின் மார்க்கட் வெல்யூவை பொறுத்து இந்த சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
அதே போல உச்ச நட்சத்திரங்களின் படத்தில் நடித்துவிட்டாலே பல நடிகைகள் தங்களது சம்பளத்தை உயிர்த்தி விடுகின்றனர். இந்த சம்பள பட்டியில் வருடத்திற்கு வருடம் மாறிவிடுகிறது. நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள் என்றும் படம் வெற்றிபெறும்போது சம்பளத்தை ஏற்றும் நடிகைகள், தோல்வி அடையும்போது குறைப்பது இல்லை என்றும் பட அதிபர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது.
இதையும் பாருங்க : ராஜகோபாலன் சார் மீது நடவடிக்கை எடுக்காதீங்க, அந்த பசங்க என்ன குழந்தையா – வக்காலத்து வாங்கிய BJP பிரபலம். கிழிததெடுத்த ஜூலி.
தமிழ் சினிமாவை பொறுத்த வரை நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, கீர்த்தி சுரேஷ், திரிஷா ஆகிய இவர்கள் தான் தற்போதைய முன்னனி நடிகைகள். இதில் நயன்தாரா தான் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நபராக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் தென்னிந்திய சினிமா நடிகைகளின் லேட்டஸ்ட் சம்பள பட்டியில் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டும் நயன்தாரா தான் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை கேட்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நயன்தாரா கைவசம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இவரை தொடர்ந்து அனுஷ்கா 3 கோடி சம்பளம் வாங்குகிறார்.
அனுஷ்காவை தொடர்ந்து சமந்தா ஒரு படத்துக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் கேட்பதாக கூறப்படுகிறது. அதே போல கீர்த்தி சுரேஷ் ரூ.3 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். காஜல் அகர்வால் ரூ.2 கோடி, திரிஷா ரூ.2 கோடியும், சுருதிஹாசன், தமன்னா ஆகியோர் ஒரு படத்தில் நடிக்க ரூ.1 கோடியே 50 லட்சமும் கேட்பதாக கூறப்படுகிறது. இது லீட் ரோல் என்றால் சம்பளத்தில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதே இல்லை என்று கூறப்படுகிறது.