அன்னிக்கு இந்தி எதிர்ப்பு டி-ஷர்ட போட்டு, இப்போ இந்தி பாடலுக்கு இசை – நெட்டிசனின் கமென்டிற்கு யுவன் கொடுத்த பதிலடி.

0
2527
yuvan
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசை ஞானி இளையராஜாவின் மகன் தனது தந்தைக்கு நிகராக ஒரு இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தனக்கென ஒரு பாணியில் கிட்டத்தட்ட தன் தந்தையை ஒத்தது போல இசையமைக்கும் யுவனுக்கும் ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகும். அரவிந்தன் துவங்கி தற்போது வரை யுவன் எண்ணெற்ற இசை ஆல்பங்களை கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் யுவன் சமீபத்தில் இந்தி பாடலுக்கு இசையமைத்தது பெரும் விவாத பொருளாக மாறி இருக்கிறது.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. திமுக போன்ற பல்வேறு கட்சியினர் இந்த இந்தி எதிர்ப்பு பிரச்சனையில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

- Advertisement -

அதே போல் தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் கூட இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இந்தி திணிப்பை எதிரிக்கும் திருவள்ளுவர் புகைப்படம் அச்சிடப்பட்ட புகைப்படம் அடங்கிய டீ சர்ட் ஒன்றை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் நான் தமிழ் பேசும் இந்தியன் என்று பொருள்படும் வகையில் “ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இப்படி ஒரு நிலையில் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் ‘டாப் டக்கர்’ என்ற இந்தி பாடலுக்கு இசையமைத்து இருந்தார். இந்த பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுத ராஸ்மிகா மந்தனா இந்த பாடலுக்கு நடனமாடி இருந்தார். சமீபத்தில் இந்த பாடலின் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் யுவன். இப்படி ஒரு நிலையில் இந்தி எதிர்ப்புக்காக யுவன் அணிந்த டி ஷர்ட்டின் புகைப்படத்தை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர் ‘இதுக்கு பேரு தான் எச்ச’ என்று கமன்ட் செய்து இருந்தார். அதற்க்கு பதில் அளித்த யுவன் டி-ஷர்ட்டில் எழுதி இருப்பது ‘நான் ஒரு தமிழ் பேசும் இந்தியன், அது தான் உண்மை’என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement