கோவில் படத்தில் வந்த அதே இசையை மன்மதன் படத்தில் நோட் செஞ்சிருக்கீங்களா. இப்படி சுட்டுட்டாரே யுவன்.

0
3021
manmadhan
- Advertisement -

இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் கோவில். இந்த படத்தில் சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு, ராஜ்கிரன், நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியின் இசையை அப்படியே யுவன் சங்கர் ராஜா அவர்கள் மன்மதன் படத்தில் பயன்படுத்தியுள்ளார்.

வீடியோவில் 16 : 38 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

தற்போது இந்த இரண்டு படங்களின் வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், ஏ. ஜே. முருகன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் மன்மதன். இந்த படத்திலும் சிலம்பரசன் நடித்துள்ளார். இந்த படத்தில் சிலம்பரசன் அவர்கள் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவருடன் ஜோதிகா, கவுண்டமணி, சந்தானம் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மேலும், இந்த படத்தில் ‘வானம்ன்னா உயரம் காட்டு பூமின்னா பொறுமை காட்டு’ என்ற பாடலில் வரும் இசை அப்படியே கோவில் படத்தில் இடம் பெற்று இருக்கும் ஒரு காட்சியின் இசை போல் உள்ளது.

வீடியோவில் 1:51 நிமிடத்தில் பார்க்கவும்

2004 ஆம் ஆண்டு மன்மதன் படத்திற்கு முன்பே வெளியான கோவில் படத்தில் வந்த இசையை அப்படியே யுவன்-ஷங்கர்-ராஜா மன்மதன் படத்தில் பயன்படுத்தியுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் பல முன்னணி நடிகர்களின் படத்துக்கு இசை அமைத்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement