Lockdown Effect : அந்நியனாக மாறிய பிரபல தொகுப்பாளினி. இவங்க பண்ற அலப்பறைய பாருங்க.

By Rajkumar · 10/4/2020

கொரோனா வைரஸின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உலகமே ஆட்டம் கண்டு போய் இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வேதனையிலும் கவலையிலும் உள்ளார்கள். இந்தியாவில் கொரோனாவினால் 6412 பேர் பாதிக்கப்பட்டும், 199 பேர் பலியாகியும் உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அனைவரும் மாஸ்க் மற்றும் சானிடைசர் போன்றவற்றை உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிய உள்ள நிலையில் இதை நீடிப்பதாகவும் ஒருபக்கம் கூறப்பட்டு வருகிறது.

https://www.instagram.com/p/B-v9b9pFskB/

ஊரடங்கு உத்தரவால் பலரும் வீட்டில் இருந்து பல்வேறு விதமான விடீயோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் சினிமா மற்றும் டிவி பிரபலங்கள் துணி துவைப்பது, சமைப்பது, வீட்டு வேலை செய்வது, உடற்பயிற்சி செய்வது என்று பல விதமான புகைப்படங்களையும் வீடியோகளையும் பதிவிட்டு ரசிகர்களை கொஞ்சம் டைம் பாஸ் செய்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : உடன் பிறப்புகள் தினம். விஜய் அஜித்துடன் எடுத்துக்கொண்ட இதுவரை வெளியிடாத புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு

இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா, அந்நியன் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு lockdown effect டால் அந்நியனாக மாறிவிட்டேன் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். 90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா.

https://www.instagram.com/p/B-zbVu2FHk4/

அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற 'இளமை புதுமை' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள்.

இதையும் பாருங்க : இரண்டாம் உலகம் படத்தில் முதலில் நடித்தது இந்த ஜோடி தான். படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ.

இளமை புதுமை நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விளக்கினார் அர்ச்சனா. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ச ரி க ம ' ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.

behindtalkies AMP · Quick view
View full