தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் வெங்கட் பிரபுவும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், பின்னணிப் பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பல முகங்களைக் கொண்டவர். இவர் தமிழ் சினிமாவில் புகழ் வாய்ந்த இசை அமைப்பாளர் கங்கை அமரனின் மகன் ஆவார். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

ஆனால், இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பே 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் கால்தடம் பதித்தார். இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் சோசியல் மீடியாவில் உடன் பிறந்தவர்கள் தினத்தின் ஸ்பெஷலாக அஜித், விஜய் உடன் இருக்கும் ஒரு மாசான புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “மங்காத்தா” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது.
இந்த படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்தாலும் சமூக வலைத்தளங்களில் இன்னும் பேசப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் தொடங்கிய நாளில் இருந்தே எந்த நாள், எந்த திதி என்று எதுவுமே தெரியவில்லை. இது எந்த நாள் என்று மக்கள் பேசிக் கொள்ளும் அளவிற்கு நாட்டின் நிலைமை போய் கொண்டு இருக்கிறது. இன்று உலக உடன் பிறந்தவர்கள் தினம் அதாவது சகோதரர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித், விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மங்காத்தா படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்படத்துடன் இவர் கூறியிருப்பது, சகோதரர் தினத்தின் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் அன்பை பரப்புங்கள். வெறுப்புணர்வை நிறுத்துங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வெங்கட் பிரபுவின் இந்த டீவ்ட்டை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள். இதுவரை வெளியிடாத புகைப்படத்தை வெங்கட் பிரபு பகிர்ந்ததால் ரசிகர்கள் அனைவரும் இதை கொண்டாடி வருகிறார்கள். இவர்கள் மூன்று பேரின் கூட்டணியை ஒரு முறையாவது திரையில் காண வேண்டும் என ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். இவர் இப்படி குறிப்பிட்டிருப்பது அஜித், விஜய் ரசிகர்களுக்கு சொல்லும் அறிவுரை தான் என்று தெரியவருகிறது. உண்மையாலுமே அஜித்தும், விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், அவரது ரசிகர்கள் தான் சோசியல் மீடியாவில் மோதிக் கொள்கிறார்கள். சண்டை போடுவதற்கு என்றே ஹாஸ்டேக்கை உருவாக்கி வருகிறார்கள்.
https://twitter.com/vp_offl/status/1248499399690350592
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இந்த படம் அரசியல் கதையை வைத்தும், திரில்லர் காட்சிகளை கொண்டதாகவும் இருக்கும் என தகவல்கள் தெரியவந்தன. இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆவார். மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.





