வெங்கடேஷின் மிரட்டல், ரத்னா எடுத்த விபரீத முடிவு- விறுவிறுப்பில் அண்ணா சீரியல்

0
150
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘அண்ணா’ . தன் தங்கைகளுக்காக போராடும் அண்ணனின் கதைதான் இந்த சீரியல். இந்த வாரம், சண்முகம் சௌந்தரபாண்டிக்கு எதிராக பஞ்சாயத்தை கூட்டி, தன் தங்கை இசக்கியை மேள தாளத்தோடு தன் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்‌. அதனால் சண்முகத்தின் மீது பரணி கோவமாக இருக்கிறார். பின், இசக்கி விஷயத்தில் கோவமாக இருக்கும் பரணியை சண்முகம் பேசி சமாதானம் செய்கிறார். ரத்னா வீட்டிற்கு வந்து இசக்கியின் முடிவை பாராட்டுகிறார்.

-விளம்பரம்-

அதைத்தொடர்ந்து வீரா போலீஸ் ட்ரைனிங் முடித்து வீட்டிற்கு வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது பரணி ரத்னாவிடம், உன்னை வெங்கடேசன் வீட்டில் விட்டுட்டு வந்தது உன்னோட நல்லதுக்கு தான் என சொல்கிறார். அதற்கு ரத்னா, ஒரு அண்ணியா உன் வேலையை நல்லபடியா பண்ணிட்ட, இனிமே என் நல்லதுக்கு நீ எதுவுமே பண்ண வேண்டாம் என சொல்லிவிட்டு போய்விடுகிறார். அதனால் பரணி ரொம்ப வருத்தப்படுகிறார்.

- Advertisement -

அண்ணா சீரியல்:

பின், நேற்று எபிசோடில், பாக்கியம் கோபத்தில் சமைக்காததால் சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா கஷ்டப்படுகிறார்கள். அப்போது பரணி தன் அம்மாவை பார்ப்பதற்காக சாப்பாடு கொண்டு வருகிறார். அப்போது சௌந்தரபாண்டி, வாழா வெட்டி இசக்கி எப்படி இருக்கிறாள் என்று கேட்க, பரணி அவருக்கு பதிலடி கொடுக்கிறார். பின், தன் அம்மாவை சமாதானப்படுத்தி, பரணி சாப்பிட வைக்கிறார். அதோடு, இசக்கி சீக்கிரம் இந்த வீட்டுக்கு வந்து விடுவாள் என்று பாக்கியத்திடம் பரணி வாக்குறுதி கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து, சௌந்தரபாண்டியிடம், ஒரு நம்பர் வந்து சண்முகம் உங்கள் மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாராமே என்று கேட்க, அவர் சண்முகம் குறித்து தப்பு தப்பாக அந்த நபரிடம் கூறுகிறார்.

நேற்றைய எபிசொட்:

அந்த சமயம் பார்த்து சண்முகம் அந்த இடத்திற்கு வர, இவன்லாம் ஒரு பிரசிடெண்ட் என்று சௌந்தரபாண்டி திட்டுகிறார். பின், அந்த நபர் சண்முகத்திடம் வந்து, ஒரு பொண்ணை வாழ வெட்டியாக வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டியே நியாயமா என்று கேட்க, அந்த ஐயா சௌந்தரபாண்டி என்ன செய்தார் தெரியுமா என்று வெட்டுக்கிளியிடம் இருந்து அந்தப் பிட் நோட்டீஸ் வாங்கி கொடுக்கிறார். இதையடுத்து, ரத்னாவின் மாமியார் தன் மகன் வெங்கடேசனிடம், இசக்கியை அவள் அண்ணன் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டானாம். உன் பொண்டாட்டி இன்னைக்கு தான் அவங்க அண்ணன் வீட்டுக்கு போயிட்டு வந்தா, அவளை கொஞ்சம் அடக்கிவை என்று ஏத்தி விடுகிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசொட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில், வெங்கடேஷ் ரத்னாவிடம் டாக்குமெண்டை கொடுத்து ஸ்கூலை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி கையெழுத்து போட சொல்கிறார். ஆனால், ரத்னா கையெழுத்து போட முடியாது என்று மறுக்க, வெங்கடேஷ், உனக்கு இதை விட்டா வேற வழியே இல்ல என்று ரத்னாவை மிரட்டுகிறார். மேலும், எனக்கு ஒரு பிரச்சனை என்றால் என் அண்ணன் வந்து நிற்பான் என ரத்னா சொல்கிறார்.

சீரியல் ட்ராக் :

அதற்கு வெங்கடேஷ், பரணி என்ன பண்ணுவாங்க? உன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு இங்க தள்ளிவிட்டு போவாங்க. உன்கிட்ட எப்படி கையெழுத்து வாங்கணும்னு எனக்கு தெரியும் என மிரட்டுகிறார். அதன் பிறகு, பரணிக்கு உடம்பு முடியாமல் போக, சண்முகமே டாக்டராக மாறி பரணிக்கு ரொமான்டிக் ட்ரீட்மென்ட் கொடுக்கிறார். பின், மூணு வேளை சுடுதண்ணீர் ரசம் சாதம் தான் சாப்பிடணும் என பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க ரத்னா, வெங்கடேஷ் சொன்ன வார்த்தைகளால் மனம் உடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Advertisement