மெர்சல் படத்தில் குட்டி தளபதியாக நடிக்க இருந்தது இவர் தானாம்.! யாருன்னு பாருங்க.!

0
1468

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் இருவர் கூட்டணியில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு தார்[தற்போதும் பல விருதுகளை பெற்றது.

இந்த படத்தில் குட்டி தளபதியாக நடித்த சிறுவனை யாராலும் மறக்க முடியாது. ஆனால், உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது வேறு யாரும் இல்லை நம்ம ஜூனியர் சூப்பர் ஸ்டார் அஸ்வந்த் தானம். இதை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : மெர்சல் பட குட்டி விஜய்யா இது ? பாத்தா நம்பமாட்டீங்க – புகைப்படம் உள்ளே !

- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் அஸ்வந்த். இந்த நிகழ்ச்சியில் பட்டம் வென்ற அஸ்வந்த் தற்போது சீரியல், திரைப்படங்கள் என்று பிசியாக இருந்து வருகிறார். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அஸ்வந்த், மெர்சல் படத்தில் விஜய் மகனாக நான் தான் நடிக்க வேண்டியது. ஆனால், அந்த சமயத்தில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடந்து வந்ததால் நடிக்க முடியாம போய்டுச்சு. விஜய் சார் கூட நிச்சயம் படம் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement