செம்பருத்தி சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வந்த ஜீ தமிழின் முக்கிய தொடர்.

0
1255
zeetamil
- Advertisement -

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சின்னத்திரை சீரியல்கள் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது. அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டான சீரியல்கள் ஒளிபரப்புவது 3 தொலைக்காட்சிகளில் மட்டும் தான். அது சன், விஜய், ஜீ தமிழ் ஆகும். இந்த மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இதனால் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் மூன்று சேனல்களும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், எல்லா தொலைக்காட்சிகளிலும் நிறைய புதுப்புது தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர்கள் என்றால் சில தான். அந்த வகையில் ஜீ தமிழில் மிகவும் ஹிட்டாக பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் தொடர் செம்பருத்தி. இந்த தொடர் மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல்.

- Advertisement -

செம்பருத்தி சீரியல்:

இந்த சீரியல் ஜீ தமிழில் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை கொண்டு எடுக்கப்பட்டது. மேலும், இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து இருந்தார்.

சீரியலில் நடிக்கும் நடிகர்கள்:

கதாநாயகியாக ஷபானா நடித்து வருகிறார். கார்த்திக் ராஜ் -ஷபானா இருவரின் கெமிஸ்ட்ரி வேற லெவலாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இவர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. பின் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் சீரியல் இருந்து விலகி விட்டார். இதனால் ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள். பிறகு இவர் சினிமாவில் நடிக்க போவதாக அறிவித்தார். மேலும், இவருக்கு பதில் தொகுப்பாளர் அக்னி இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

செம்பருத்தி சீரியல் கிளைமேக்ஸ்:

இவர்களுடைய ஜோடியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் பிரியா ராமன் நடித்து வருகிறார். இந்த தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றது. மேலும், இந்த சீரியல் 1400 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. தற்போது கிளைமேக்ஸை நோக்கி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த தொடர் விரைவில் இறுதி கட்டத்தை எட்ட உள்ளதாக கடந்த கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது.

பாதியிலேயே நிறுத்தப்பட்ட சீரியல்:

அதாவது, இந்த தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு முடிவுக்கு வருகிறது. அதன் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்துள்ளது. மேலும், செம்பருத்தி சீரியல் முடிவுக்கு வர ஒரு டப்பிங் சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ரீமேக் சீரியலான இனிய இரு மலர்கள் தொடர் 11 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. தற்போது இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. இந்தத் தொடருக்குப் பதிலாக சின்ன பூவே மெல்ல பேசு தொடர் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியானது. அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement