ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ‘கார்த்திகை தீபம்’ ஒன்று. சமீபத்தில் தான் இதன் முதல் பாகம் முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது பாகம் தொடங்கி இருக்கிறது. இந்த வாரம், சாமுண்டீஸ்வரியின் பிஏ சந்திரகலா, சிவனாண்டியிடம் இந்த ஊரில் கார்த்திக் என்று ஒருத்தன் வந்திருக்கிறான். அவன் சாமுண்டீஸ்வரியை அவமானப்படுத்தி விட்டான். அதனால், கார்த்திக்கை சாமுண்டீஸ்வரி அடிமையாக்க வேண்டும் என்று நினைக்கிறாள். நீங்க போய் அவன்கிட்ட பேசுங்க என்று கணவனை சந்திரகலா ஏவி விடுகிறார்.
பின் , சிவனாண்டியின் ஆட்கள் சாமுண்டீஸ்வரியை கத்தியால் குத்த வர, அவர் துப்பாக்கியை கையில் எடுக்க இருவருக்கும் இடையே நடக்கும் தகராறில் துப்பாக்கியை தள்ளிவிட்டு சாமுண்டீஸ்வரியை அவர்கள் குத்த வருகின்றனர். அப்போது கார்த்திக் இடையில் புகுந்து சாமுண்டீஸ்வரியை காப்பாற்றுகிறார். ரவுடிகளுக்கும் கார்த்திக்கும் இடையே பெரிய சண்டை நடக்கிறது. இதையடுத்து, சிவனாண்டி கார்த்திக்கை சந்தித்து தன்னுடன் சேர்ந்து வேலை செய்யுமாறு சொல்ல, கார்த்திக் முடியாது என மறுக்கிறார். பிறகு சந்திரகலா மற்றும் சிவனாண்டி திட்டம் ஒன்றை போடுகின்றனர்.
கார்த்திகை தீபம் 2 :
திடீரென சாமுண்டீஸ்வரி வீட்டில் கரண்ட் கட் ஆகிவிடுகிறது. வீட்டிற்குள் ரவுடிகளை இறக்கி சாமுண்டீஸ்வரியை குத்த சொல்கிறார் சிவனாண்டி. நேற்று எபிசோடில், யாரோ ஒருவர் வீட்டுக்குள் நுழைய, சாமுண்டீஸ்வரி துப்பாக்கியுடன் நிற்கிறார். அப்போது அங்கு கார்த்திக் வந்தது நிற்க, ரேவதி, நீ எதுக்கு வந்த என்று கேள்வி கேட்கிறார். கார்த்திக், வேலைக்கு சேர சம்மதம் சொல்ல தான் வந்தேன், நீங்க எதுக்கு போலித் துப்பாக்கி வச்சுட்டு நின்னுட்டு இருக்கீங்க என்று சாமுண்டீஸ்வரியை கலாய்க்கிறார்.
நேற்றைய எபிசொட் :
அதற்கு சாமுண்டீஸ்வரி உன்னை அப்படி எல்லாம் வேலைக்கு எடுக்க முடியாது சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். கார்த்திக், நான்தான் உங்க எல்லாரையும் இன்டர்வியூ பண்ணி வேலைக்கு சேர்வேன் என்று செக் மேட் வைக்கிறார். அதற்குப் பிறகு ஒவ்வொருத்தராக கூப்பிட்டு கார்த்தி கேள்விகளை கேட்க கடைசியாக கார்த்திக் ஸ்வேதா மூலமாக தான் வீட்டுக்குள் நுழைய காரணம் என தெரிகிறது. கடைசியாக கார்த்திக் சந்திர கலாவை விசாரிக்க கூப்பிடுகிறார்.
இன்றைய எபிசொட் :
இந்நிலையில் இன்றைய எபிசோடில், கார்த்திக் சந்திரகலாவை மடக்கி மடக்கி கேள்வி கேட்க ஒரு வழியாக அவர் சமாளித்து விடுகிறார். அதைத்தொடர்ந்து கார்த்திக் நாளைக்கு வந்து வேலையில் சேர்ந்து கொள்வதாக சொல்கிறார். பின் சந்திரகலா, சிவனாண்டியிடம் கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் வேலைக்கு சேர்ந்தது குறித்து சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு சந்திரகலா, சாமுண்டீஸ்வரி இடம் கோவிலில் பெண் தெய்வங்கள் மட்டுமே உள்ளன. ஆண் தெய்வங்கள் இல்லை.
சீரியல் ட்ராக் :
இது தவறாகி விடும் என ஒரு சாமியார் சொன்னதாக சொல்ல, சாமுண்டீஸ்வரி அதெல்லாம் பண்ண முடியாது. அப்படி சொன்னதே ஒரு ஆண் சாமியார் என அலட்சியம் செய்கிறார். இதையடுத்து, ஒரு பெண்ணை அவரது கணவர் கத்தியால் குத்தவர, மயில்வாகனம் மற்றும் ராஜராஜன் அவரை தடுக்கிறார்கள். ஆனால், அவர் இது என் குடும்பப் பிரச்சனை என மீசையை முறுக்க, சாமுண்டீஸ்வரி அவரை எட்டி உதைக்கிறார். பின் என் முன்னாடியே மீசையை முறுக்கறியா என ஆவேசப்பட, சாமுண்டீஸ்வரி ஆட்கள் அவனை கட்டிப்போட்டு அவன் மீசையை வழித்து விடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.