என்னப்பா, ஜீ தமிழ் பாக்கியலட்சுமியா – தேவயானியின் புதிய சீரியல் ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
2009
dev
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

தமிழில் பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “ஸ்ரீமோய் ’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியல் தமிழில் மட்டுமல்ல கன்னட, மராத்தி, மலையாளம், தெலுகு மற்றும் ஹிந்தியிலும் ஒளிபரப்ப படுகிறது.இந்த தொடரின் தமிழகத்தில் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் கே எஸ் சுசித்ரா .

- Advertisement -

இந்த தொடர் விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் மார்ச் 22 முதல் புது புது அர்த்தங்கள் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடரில் தேவயாணி மற்றும் அபிஷேக் நடிக்கிறார்கள். இந்த இருவரும் சன் தொலைக்காட்சியில் 18 ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் இணைந்து நடித்தனர்.

அந்த சீரியலில் அபி – பாஸ்கர் என்ற இவர்கள் இருவரும் நடித்தார்கள். இப்படி ஒரு நிலையில் நீண்ட வருடங்களுக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். சமீபத்தில் இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. இதனை பார்த்த பலரும் இது என்ன ஜீ தமிழின் ‘பாக்கியலட்சுமி’ தொடரா என்று கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement