சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர். ஆனா, பாவம் இவங்க.

0
1520
- Advertisement -

சமீபகாலமாகவே ஒவ்வொரு சேனலும் தங்களின் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமாக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி சர்வைவர் என்ற ஒரு ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்புகிறார்கள். வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த ஓரிடத்தில் ஒன்று சேர்த்த பிறகு அவர்கள் கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர்.

-விளம்பரம்-

மேலும், ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். நடிகர் அர்ஜுன் முதல் முறையாக தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகிறார். சவால்கள் நிறைந்த தனித்தீவில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

மேலும், இவர்கள் காடர்கள், வேடர்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றனர். சமீபத்தில் காடர்கள் அணியில் இருந்து இந்திரஜாவும், வேடர்கள் அணியில் இருந்து ஸ்ருஷ்டியும் எலிமினேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாம் தீவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் நேற்று காடர்கள் அணியில் இருந்து வெளியேறிய காயத்ரியும் எலிமினேஷன் லிஸ்டில் வந்தார்.

இவர்கள் மூவருக்கு நேற்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் வெல்லும் இருவர் மீண்டும் இந்த ஷோவில் தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் முதலில் காயத்ரியும், ஸ்ருஷ்டியும் போட்டியிட்ட நிலையில் காயதிரி வெற்றிபெற்றதால் ஸ்ருஷ்டி இந்த முதல் போட்டியாளராக வெளியேறி உள்ளார். இன்றும் காயத்ரிகும் இந்திரஜாவுக்கும் போட்டி வைக்கப்ப்படும் அதில் தோல்வியடையும் நபர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவர்.

-விளம்பரம்-
Advertisement