இன்ஸ்டாவில் பதிவிட்ட அந்த வீடியோவால் வந்தது தான் இந்த வாய்ப்பு – சர்வைவர் ஷோவில் இளசுகளின் கிரஷ் ஐஸ்வர்யா

0
1628
ayswarya
- Advertisement -

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சி தமிழ் மக்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் ஆனால், பல நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழில் முதல் முறையாக தற்போது தான் இந்த நிகழ்ச்சியை அறிமுகம் செய்து உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியை அக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இதில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. முதல் நாளே காடர்கள், வேடர்கள் என அணைத்து போட்டியாளர்களும் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு கடுமையான போட்டிகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா கிருஷ்ணன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

இதையும் பாருங்க : ராமதாசுடன் சந்தானம் பகிர்ந்த புகைப்படம் – நெட்டிசன்களின் ரியாக்ஷனை பாருங்க.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு பிட்னஸ் டிரெய்னர் ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு. அதனால் நன் பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.நான் அதுக்கு முன்னாடி அமேசானுக்கு ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். பின் பிட்னஸ் டிரெய்னர் என்னுடைய கனவு என்பதால் நான் மும்பையில் தங்கியிருந்து அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். நான் சர்வைவர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு காரணமே இன்ஸ்டாகிராமில் வந்த என்னோட ஸ்டன்ட் வீடியோ தான்.

என்னுடைய ஸ்டாண்ட் வீடியோக்களை பாத்துட்டு தான் ஜீ தமிழ் நிறுவனம் எனக்கு கால் பண்ணி கூப்பிட்டாங்க. அவங்க என்னிடம் கேட்ட ஒரே கேள்வி உங்களுக்கு தமிழ் பேச தெரியுமா? என்று தான் கேட்டார்கள். நான் தமிழன் என்பதால் எனக்கு தமிழ் பேச தெரியும் என்று சொன்னவ உடனே நீங்க சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். பின் அவர்கள் என்னை இன்டர்வியூக்கு நேரில் வரச் சொல்லி இருந்தார்கள். இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண உடனே சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-

எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் வரும் சவால்களை எதிர்கொள்ள முடியும் என நம்பிக்கை இருக்கு. அதே மாதிரி எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் போலீஸ் கதாபாத்திரம், வொண்டர் வுமன்,பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற தைரியமான கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தற்போது இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement