ராமதாசுடன் சந்தானம் பகிர்ந்த புகைப்படம் – நெட்டிசன்களின் ரியாக்ஷனை பாருங்க.

0
2816
santhanam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்களிடையே பிரபலமானார். இதற்கு பிறகு இவர் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். மேலும், இவருடைய நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் வேற லெவல்.

-விளம்பரம்-

காமெடியனாக திரையுலகில் கால் பதித்த சந்தானம் அவர்கள் தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்து வந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. சமீபத்தில் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதையும் பாருங்க : கெளதம் கார்த்திக் மட்டும் தான தெரியும், கார்த்தியோடு மற்ற மகன்களை பார்த்துக்கீறீங்களா.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் சந்தானம், டாக்டர் ராமதாஸ் அவர்களை சந்தித்த போது எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் திருமணத்தில் சந்தானம் கலந்து கொண்டார். அப்போது சந்தானம், டாக்டர் ராமதாஸ் அவர்களை சந்தித்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் அய்யா அவர்களை சந்திக்கிறேன் என்று சந்தானம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். மேலும், நெட்டிசன்கள் இது குறித்து சந்தானம் மீம்ஸ் போட்டு சோசியல் மீடியாவில் கேலி,கிண்டல் செய்து வருகிறார்கள். சமீபத்தில் தான் சந்தானத்தின் டிக்கிலோனா படம் வெளியானது.

-விளம்பரம்-

அதில், படத்தில் ஊனமுற்றவர்களை குறித்து சந்தானம் தாழ்வாக பேசியிருப்பதாக காட்சி வெளிவந்துள்ளது. இது பலரது மனங்களில் பாதித்ததாகவும் இந்த வருத்தத்தை வெளிப்படுத்தும் அந்த காட்சிகளை கண்டித்து டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், தமிழ் வளர்த்த மூதாதைகள் பலர் கம்பு ஊன்றி வளர்ந்தவர்கள் தான். இது உங்களுக்கு தெரியாத சந்தானம்.

கம்பு ஊன்றி நடக்கும் பல மாற்று திறனாளிகள் நம் நாட்டிற்கு உலக நாடுகள் மத்தியில்
சென்று பல மாடல்களை பெற்று தந்துள்ளனர். ஊனம் இல்லாதவர்களை விட எங்கள் மக்கள் தான் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். உண்மையிலேயே அவர்கள் தான் போராளி. அவர்களை இப்படி இழிவாக நகைச்சுவை படுத்துவது சரியானதல்ல. நாங்கள் சொல்லவேண்டியதை சொல்லி விட்டோம். எங்கள் தரப்பு நியாயத்தை ஊடகங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதை கோரிக்கையாக முன் வைக்கிறோம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement