அவரு Sofa-ல ஒக்காந்தாரு நான் கீழ ஒக்காந்த. ஆனால்? விஜய்யை நேரில் சந்தித்த தருணத்தை விலக்கிய ரசிகர்.

0
82962
Vijay-fan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக விளங்கி வருபவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் அவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய படங்களை ரசிகர்கள் தியேட்டர்களில் திருவிழா போன்று கொண்டாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவரை தங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவும் பாவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இவருடைய ரசிகர்கள் பட்டாளம் எண்ணிலடங்காதவை. சமீபத்தில் தான் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த “பிகில்” படம் ரசிகர்களை தெறிக்க விட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

சமீபத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் பார்வையற்ற நபர் ஒருவர் விஜய் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, விஜய் அண்ணா உங்களை சந்திக்க நான் 20 வருடங்களுக்கு மேலாக முயற்சி செய்து வருகிறேன். ஆனால், எல்லாம் தோல்வியில் தான் முடிந்து வருகிறது. நீங்கள் நூறு வருஷம் இல்ல ஆயிரம் வருஷத்துக்கு மேல் நன்றாக இருக்க வேண்டும். உங்களை நான் இறப்பதற்குள் ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும். அதோடு நீங்கள் உயிரோடு இருக்கும் போதே நாங்கள் இறந்து விட வேண்டும். ஏன்னா, நீங்கள் இல்லாத உலகத்தில் எங்களால் வாழ முடியாது என்று கூறினார். அவர் கூறிய வார்த்தை பலரையும் கண் கலங்க வைத்து விட்டது.

- Advertisement -

மேலும், அந்த வீடீயோவை பலரும் பகிர்ந்து அதனை விஜய் விரைவில் பார்க்க வேண்டும் என்று ஆசைபட்டனர். இந்த நிலையில் அந்த ரசிகரின் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. மாஸ்டர் பட படப்பிடிப்பில் விஜய்யை நேரில் சந்தித்த தருணத்தை பிரபல வலைதள சேனல் ஒன்றில் விவரித்து இருக்கிறார் அந்த தீவிர ரசிகர். அந்த பேட்டியில் பேசிய அவர், தளபதி மாற்றுத்திறனாளிகளை சிம்பதியாக பார்க்கமாட்டார் அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஐயோ பாவம் என்று இரக்க காட்ட மாட்டார் அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிம்பதி காட்டுவதற்கு பதிலாகஎம்பதி காட்டுவார் அதைத்தான் நேற்று நான் தளபதியிடம் பார்த்தேன். கேரவனில் என்னுடைய கையை பிடித்துக்கொண்டு கூட்டிக்கொண்டு போனார்.

வீடியோவில் 11:25ல் பார்க்கவும்

-விளம்பரம்-

இந்த பக்கம் சோபா இருக்கிறது உட்காருங்கள் என்று சொன்னார். ஆனால், நான் கீழே தான் அமருருவேன் என்று சொன்னேன். ஆனால், அவர் கீழே உட்காரக்கூடாது என்று சொன்னார். அதற்கு நானும் இல்லை அண்ணா நீங்க எப்போதும் மேலே இருக்கவேண்டும் நான் கீழே இருக்க வேண்டும் என்று சொன்னதற்கு நாம் இருவரும் எப்போதும் சமமாகத்தான் இருக்கவேண்டும். அதனால் இரண்டு பேரும் சமமாகத்தான் அமர வேண்டும் என்று கூறி என்னை உட்கார வைத்தார் என்று மிகுந்த பூரிப்புடன் தளபதியை நேரில் சந்தித்த தருணத்தை கூறியுள்ளார்.

Advertisement